Kidny

Kidny

150 மில்லயன் ரூபா பெருமதியான பொருட்கள் தீக்கிரை ..


வென்னபபுவ நகரில் அமைந்துள்ள  முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான 'லாஸ்ட் சான்ஸ்' எனப்படும் லைடிங் மற்றும் மின் உபகரணங்கள் வர்த்தக நிலையம் இன்று அதிகாலை தீக்கிரையாகியுள்ளது.

சம்பவத்தை நேரில் கண்டவர்களின் சாட்சிப்படி  குறிப்பிட்ட வர்த்தக நிலையம் இன்று நள்ளிரவு 2 மணியளவில் தீப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் மடவளை நியுஸ்  அந்த நிறுவனத்துன் பணிப்பாளர் எம் அப்துல்லாஹ் அவர்களை தொடர்புகொண்டு கேட்டபோது..

தங்களது வர்த்தக நிலையம் தீயினால் முற்றுமுழுதாக தீக்கிரையாகி உள்ளதாகவும் பொலிஸார் ஸ்லத்துக்கு வந்து விசாரணைகளை ஆர்ம்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் குறித்த காட்சி அறையில் சுமார் 150 மில்லியன் பெருமதியான பொருட்கள் இருந்ததாக முதல்கட்ட இருப்பு தகவலின் படி அறிய முடிவதாக தெரிவித்த அவர்,

ஏற்கனவே முகநூல் மற்றும் சமூக வலையூடாக தங்கள் நிறுவனத்துக்கு செல்லவேண்டாம் என இனவதாக ரீதியான தகவல்கள் பரப்பப்பட்டு வந்ததாகவும் மின் உபகரணங்கள் இருப்பதால் வழமையாக  வர்த்தக நிலையத்தை மூடும் போது மின் இணைப்புகளை முற்றுமுழுதாக துண்டிப்பதாக அவர் குறிப்ப்பிட்டார்.

ஏற்கனவே அலுத்கமை மல்லிகாஸ் பெஷன் பக் ஆகிய நிறுவனங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக ரசாயன பகுப்பாய்வு அறிக்கை வந்துள்ள நிலையில் இந்த சம்பவம் ஒரு நாசகார வேலையாக இருக்கும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

150 மில்லயன் ரூபா பெருமதியான பொருட்கள் தீக்கிரை .. 150 மில்லயன் ரூபா பெருமதியான பொருட்கள் தீக்கிரை .. Reviewed by Madawala News on 5/18/2017 10:27:00 AM Rating: 5