Ad Space avaiable

இலங்கை முழுதும் இந்தியாவின் (1990) அவசர ஆம்புலன்ஸ், மலைகயக்த்துக்கு 10 ஆயிரம் வீடுகள்... மோடி.


இந்தியப் பொருளாதார அபிவிருத்தியின் இலாபத்தை, இலங்கையும் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலாள பொருளாதார ஒத்துழைப்பு, 2.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளதென்றும் கூறினார்.

சர்வதேச வெசாக் உற்சவத்தின் ஆரம்ப நிகழ்வு, கொழும்பில் இடம்பெற்று வருகின்ற நிலையில், அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்துரைத்த பிரதமர் மோடி, 'அசோக்க சாம்ராஜ்ஜியத்தின் மிஹிந்து தேரரைப் போன்றே, சங்கமித்தா தேர்த்தியும் இலங்கைக்கு பௌத்தத்தைக் கொண்டுவந்தனர்.

இதற்கமைய, பௌத்தத்தின் கேந்திர நிலையமாக, இலங்கை தற்போது விளங்குகின்றது' என்றார். 'பின்னர், இலங்கையின் அநகாரிக்க தர்மபால அவர்கள், தர்மத்தின் தகவலை எடுத்துக்கொண்டு இந்தியாவுக்குச் சென்றார்' என்றும் அவர் குறிப்பிட்டார்.

'இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு, நூற்றுக்கணக்காண ஆண்டுகளைக் கடந்ததாகும். இந்நிலையில், இந்தியாவின் விமானச்சேவை நிறுவனம், கொழும்புக்கும் இந்தியாவின் வாரணாசிக்கும் இடையிலான விமானப் போக்குவரத்தை, விரைவில் ஆரம்பிக்கவுள்ளது.

 'அதன் மூலம், பௌத்த மற்றும் ஹிந்து மதங்களைச் சேர்ந்த சகோதர, சகோதரிகள், பெரும் பயனை அடைய முடியும்' என, இந்தியப் பிரதமர் மேலும் கூறினார்.

அதேவேளை, நோர்வூட்டில் தற்போது நடைபெற்றுகொண்டிருக்கின்ற விசேட கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி, தற்போது உரையாற்றி கொண்டிருக்கும் நிலையில்,  அவர் தன்னுடைய உரையை தமிழ் மொழியிலேயே ஆரம்பித்தார்.

மலையகத்துக்கு, மேலும் 10 ஆயிரம் வீடுகளை கட்டிக்கொடுப்பதற்கு இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றார். அத்துடன், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனை பரிசளித்துள்ளீர்கள் எனவும், தற்போது இலங்கையில் சில பகுதிகளில் இயங்கும் இந்தியாவின் (1990) அவசர ஆம்புலன்ஸ் சேவை நாடு முழுதும் விஸ்தரிக்கப்படும் எனவும்,எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் கொழும்புக்கும் வாரணாசிக்கும் இடையில் இந்திய விமான நிறுவனத்தின் நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இலங்கை முழுதும் இந்தியாவின் (1990) அவசர ஆம்புலன்ஸ், மலைகயக்த்துக்கு 10 ஆயிரம் வீடுகள்... மோடி. இலங்கை முழுதும் இந்தியாவின் (1990) அவசர ஆம்புலன்ஸ், மலைகயக்த்துக்கு 10 ஆயிரம் வீடுகள்... மோடி. Reviewed by Madawala News on 5/12/2017 02:42:00 PM Rating: 5