Ad Space avaiable

இலங்கையில் இருந்து ஹஜ் செல்ல முற்பணம் செலுத்திய 200 பேருக்கு வாய்ப்பில்லை.


அஸ்லம் எஸ்.மௌலானா

இவ்வருடம் இலங்கையில் இருந்து புனித மக்கா சென்று ஹஜ் யாத்திரை மேற்கொள்வதற்கு 2,800 கோட்டாக்களை, சவூதி அரேபியா ஹஜ் விவகார அமைச்சு வழங்கியுள்ள நிலையில், மேலதிகமாக 200 பேர் முற்பணம் செலுத்தியுள்ளனர் என்று முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

"இம்முறை ஹஜ் யாத்திரை மேற்கொள்ள விண்ணப்பித்தவர்களில் மீள­ளிக்­கப்­ப­டக்­கூ­டிய முற்­பணம் 25 ஆயிரம் ரூபாய் செலுத்தி தமது பய­ணத்தை  உறு­தி­ செய்­துள்ள ஹஜ் விண்­ணப்­ப­தா­ரிகள் அனை­வ­ருக்கும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்­களம் சில தினங்களுக்கு முன்னர் கடி­தங்­களை தபாலில் அனுப்பி வைத்­துள்­ளது.

இந்த கடி­தத்­துடன் இம்முறை அங்கிகரிக்கப்பட்டுள்ள ஹஜ் ­மு­க­வர்­ நிலையங்களின் பெயர் பட்டியலும் இணைக்கப்பட்டுள்ளது. யாத்திரிகர்கள் தாம் விரும்பும் முகவர் நிலை­யத்தை தெரி­வுசெய்து, எதிர்­வரும் 31ஆம் திக­திக்கு முன்பு திணைக்களத்துக்கு அனுப்பி வைக்­குமாறு கோரப்பட்டிருக்கிறது.

இம்முறை இலங்கைக்கு 2,800 ஹஜ் ­கோட்டா கிடைத்­துள்ளது. இவற்றுள் 2,650 கோட்டா ஹஜ்­ யாத்­தி­ரி­கர்­களுக்கும் 150 கோட்டா ஹஜ் முக­வர் நிலையங்களின் வழி­காட்­டிகள் மற்றும் சமையல்காரர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது.

மீள­ளிக்­கப்­ப­டக்­கூ­டிய  முற்­பணம் 25 ஆயிரம் ரூபாய் செலுத்தி, தமது பயணத்தை  உறு­தி­ செய்­துள்ள மேல­தி­க­மான 200 விண்­ணப்­ப­தா­ரிகள் இவ்வருடம் யாத்திரை மேற்கொள்வதற்கு வாய்ப்பில்லை. எனினும், தவிர்க்க முடியாத காரணங்களினால் யாராவது யாத்திரை மேற்கொள்வதை இரத்துச் செய்தால், அந்த வெற்றிடங்களின் எண்ணிக்கைக்கு இவர்களில் இருந்து தெரிவு செய்யப்படுவார்கள்" என்று குறிப்பிட்டார்.
இலங்கையில் இருந்து ஹஜ் செல்ல முற்பணம் செலுத்திய 200 பேருக்கு வாய்ப்பில்லை. இலங்கையில் இருந்து ஹஜ் செல்ல முற்பணம் செலுத்திய 200 பேருக்கு வாய்ப்பில்லை. Reviewed by Madawala News on 5/16/2017 04:49:00 PM Rating: 5