Ad Space avaiable

33 இலட்ச ரூபாய் சம்பள பணத்துடன் சவூதியில் இருந்து 14 வருடங்களின் பின்னர் நாடு திரும்பிய பெண்.


சவுதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாக சென்ற இலங்கை பெண் ஒருவர் 14 வருடங்களின் பின்னர் நாடு திரும்பியுள்ளார்.

2002 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30ஆம் திகதி சவுதி அரேபியாவுக்கு சென்றிருந்த நிலையில் நேற்று நாடு திரும்பியுள்ளார்.

சிறிபுர கம பகுதியை சேர்ந்த ஸ்ரீயாகாந்தி என்ற பெண் ஒருவருக்கே இவ்வாறு இலங்கை வருவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

சவுதியில் அவர் பணியாற்றிய வீட்டின் உரிமையாளர் மீது வழக்கு தாக்கல் செய்ததன் ஊடாக 33 இலட்ச ரூபாய் சம்பள பணத்தையும் பெற்றுள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரலவின் தலையீட்டினால் குறித்த பெண் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
33 இலட்ச ரூபாய் சம்பள பணத்துடன் சவூதியில் இருந்து 14 வருடங்களின் பின்னர் நாடு திரும்பிய பெண்.  33 இலட்ச ரூபாய் சம்பள பணத்துடன் சவூதியில் இருந்து 14 வருடங்களின் பின்னர் நாடு திரும்பிய பெண். Reviewed by Madawala News on 5/17/2017 06:50:00 AM Rating: 5