Ad Space avaiable

வடமத்திய மாகாண சபை மஹிந்தவிடம் வீழுமா ? 33 இல் 18 மஹிந்தவுக்கு ஆதரவு !


வட மத்திய மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் சிலர் கூட்டு எதிர்க் கட்சிக்கு ஆதரவு வழங்குவதற்கான பேச்சுவார்த்தையொன்று நேற்று (12) இரவு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலுள்ள மஹிந்த ராஜபக்ஷ எம்.பி.யின் உத்தியோகபுர்வ வாசஸ்தலத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் கூட்டு எதிர்க் கட்சிக்கு ஆதரவு வழங்கும் 17 பேர் கலந்துகொண்டுள்ளனர்.

வட மத்திய மாகாணத்தின் அதிகாரத்தைப் பிடிப்பதற்கு அவசரப்பட வேண்டாம் என மஹிந்த ராஜபக்ஷ இக்கலந்துரையாடலின் போது வட மத்திய மாகாண சபையின் உறுப்பினர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

நாட்டின் எதிர்கால அரசியல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு கருமமாற்றுமாறு அவர்களிடம் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

வட மத்திய மாகாண சபையில் மொத்தம் 33 உறுப்பினர்கள் உள்ளனர். அதில் 21 பேர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் ஆவர். இந்த ஐ.ம.சு.மு. உறுப்பினர்களில் 18 பேர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக அம்மாகாண சபையின் உறுப்பினர் எஸ்.எம். ரஞ்ஜித் தெரிவித்துள்ளார். DC

வடமத்திய மாகாண சபை மஹிந்தவிடம் வீழுமா ? 33 இல் 18 மஹிந்தவுக்கு ஆதரவு ! வடமத்திய மாகாண சபை மஹிந்தவிடம் வீழுமா ? 33 இல் 18 மஹிந்தவுக்கு ஆதரவு ! Reviewed by Madawala News on 5/13/2017 08:04:00 AM Rating: 5