tg travels

ஐ எஸ் அமைப்புக்கு இலங்கை ஊடாக அனுப்பட்ட 37 மில்லியன் வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் ..



இந்திய நிறுவனம் ஒன்றினால் லிபியாவில் உள்ள ஐ.எஸ்.பயங்கரவாதிகளுக்கு இலங்கை ஊடாக  வலி நிவாரண மாத்திரைகள் அனுப்பப்பட்டிருப்பதாக 
ஹிஜ்துஸ்தான் டைம்ஸ் செய்திவெளியிட்டுள்ளது.

ட்ரமடோல் என்ற ஒரு வகை வலி நிவாரண மருந்தே இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அனுப்பப்பட்ட சுமார் 37 மில்லியன் வலி நிவாரண மாத்திரைகள் இத்தாலி பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும்,அந்த மாத்திரைகளின் பெறுமதி 75 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்றும் வெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்றை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

வர்த்தக ரீதியில் இலாப நோக்கம் அல்லது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மீதான பற்று என்பவற்றிற்காக இந்த மாத்திரைகள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்று இத்தாலி பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

ஐ எஸ் அமைப்புக்கு இலங்கை ஊடாக அனுப்பட்ட 37 மில்லியன் வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் .. ஐ எஸ் அமைப்புக்கு இலங்கை ஊடாக அனுப்பட்ட 37 மில்லியன் வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் .. Reviewed by Madawala News on 5/11/2017 11:37:00 PM Rating: 5