Ad Space avaiable

பிரபல அமைச்சர் ஒருவருரின் அமைச்சை மாற்றவேண்டாம் என கூறி 40 ஐ தே க எம்பிக்கள் பிரதமரை சந்தித்தனர்..

நாளை மறுதினம் அமைச்சர்கள் அனைவரையும் ஜனாதிபதி செயலகத்திற்க்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில் ஐக்கிய தேசிய கட்சியில் சிரேஷ்ட அமைச்சர் ஒருவரின்  அமைச்சை மாற்றக்ககூடாது என ஐக்கிய தேசிய கட்சியின் 40 பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அமைச்சரவை மாற்றத்தின் போது தங்கள் அமைச்சுகளில் கைவைத்தால் தாங்கள் அரசாங்கத்தில் எந்த அமைச்சுப்பதவிகளும் வகிக்க போவதில்லை என  ஐக்கிய தேசிய கட்சி  சிரேஷ்ட அமைச்சர்கள் மூவர் தெரிவித்துள்ள நிலையில் குறித்த சிரேஷ அமைச்சருக்கு ஆதரவாக 40 ஐக்கிய தேசிய கட்சி எம் பிக்கள் பிரதமரை சந்தித்துள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சி அமைச்சர்களில் மாற்றம் செய்யப்படும் போது அவர்கள் ஊழல்  காரணமாகவே மாற்றம் செய்யப்பட்டார்கள் என்ற விமர்சனம் வரும் என்பதால் ஐக்கிய தேசிய கட்சி அமைச்சுகளில் மாற்றம் செய்ய வேண்டாம் என  அக்கட்சி உறுப்பினர்கள் தலைமையிடம் கூறி வருகின்றனர்.
பிரபல அமைச்சர் ஒருவருரின் அமைச்சை மாற்றவேண்டாம் என கூறி 40 ஐ தே க எம்பிக்கள் பிரதமரை சந்தித்தனர்.. பிரபல அமைச்சர் ஒருவருரின் அமைச்சை மாற்றவேண்டாம் என கூறி 40 ஐ தே க எம்பிக்கள் பிரதமரை சந்தித்தனர்.. Reviewed by Madawala News on 5/20/2017 03:54:00 PM Rating: 5