Ad Space avaiable

இனிப்பு மிட்டாய் கொடுத்து பாலியல் துஷ்பிரயோகம்! பிரிட்டனில் இரு இலங்கையர்களுக்கு 41 வருட சிறைத் தண்டனை!.


தாம் வேலை செய்யும் கடைக்கு வாடிக்கையாளர்களாக  வருகின்ற இளம் பெண்களை பாலியல் ரீதியாகத்  துஷ்பிரயோகம் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இரு தமிழ் இளைஞர்களுக்கு பிரித்தானிய நீதிமன்றம் ஒன்று 41 வருட  சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

தங்கள் கடைக்கு வரும் இளம் பெண்களுக்கு இனிப்பு மிட்டாய் இலவசமாகக் கொடுப்பதோடு, தொலைபேசிக்கு இலவச ரீசார்ஜ் வழங்குவதன் மூலம் அவர்களைத் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சகோதரர்களாகிய இளவரசன் இராஜேந்திரன் மற்றும் அவரது அண்ணனான வினோதன் விநோதன் இராஜேந்திரன் என்ற இவ்விருவரும் ஒன்பது இளம் பெண்களுக்கு மதுபானம் கொடுத்து,  அவர்களை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

26 வயதுடைய இளவரசனுக்கு 22 1/2 வருட சிறை தண்டனையும் 27 வயதுடைய விநோதனுக்கு 18 1/2 வருட சிறை தண்டனையும் விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து வருடங்களில் இவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்த  முப்பது குற்றச்சாட்டுகளிலும் இவர்கள் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர் என்று தெரிய வருகிறது.

லிவர்பூல் கிரவுன் நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர் செய்யப்பட்டனர். அப்போது, இளம் யுவதிகளை இலக்காகக் கொண்டு கடையில் தவறாக நடந்து கொண்டதாக நீதிபதி நோர்மன் ரைட் (Norman Wright ) தெரிவித்துள்ளார்.

14 மற்றும் 15 வயதுடைய பதின்ம யுவதிகளுக்கு இலவசமாக இனிப்பு  மிட்டாய் மற்றும் இலவச மொபைல் ரீசார்ஜ் செய்து கொடுத்து அவர்கள்  குறித்த இளம் பெண்களின் நம்பிக்கைக்குரியவர்களாகியிருக்கின்றனர். பின்னர் அவர்கள் அந்த  இளம் பெண்களை வாகனத்தில் பயணம் கூட்டிச் சென்றுள்ளனர்.

கடைசியாக, அந்தப் பெண்களை  வீடொன்றிற்குக் கூட்டிச் சென்று    மதுபானம் கொடுத்துப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கும்  உட்படுத்தியதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இனிப்பு மிட்டாய் கொடுத்து பாலியல் துஷ்பிரயோகம்! பிரிட்டனில் இரு இலங்கையர்களுக்கு 41 வருட சிறைத் தண்டனை!. இனிப்பு மிட்டாய் கொடுத்து பாலியல் துஷ்பிரயோகம்! பிரிட்டனில் இரு இலங்கையர்களுக்கு 41  வருட சிறைத் தண்டனை!. Reviewed by Madawala News on 5/16/2017 10:15:00 PM Rating: 5