Ad Space avaiable

இவ்வருடம் 42000 டெங்கு நோயாளர்கள் ! பலியானோர் 90..



நாட­ளா­விய ரீதியில் கடந்த 5 மாத காலப்­ப­கு­திக்குள் 42141 பேர் டெங்கு நோயா­ளர்­க­ளாக  இனங்­கா­ணப்­பட்­டுள்­ள­துடன் இது­வ­ரையில் இந்­நோய்த்­தாக்­கத்­துக்­குள்­ளாகி 90 பேர்  இறந்­துள்­ள­தா­கவும்  சுகா­தார அமைச்சு அறி­வித்­துள்­ளது.

அதி­க­ள­வான  டெங்கு நோயா­ளர்கள்  மேல் மாகா­ணத்­தி­லேயே  பதி­வா­கி­யுள்­ள­தா­கவும் அமைச்சு வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

இது தொடர்பில் சுகா­தார அமைச்சு வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது,

நாட்டில் இவ்­வ­ரு­டத்தின் இது­வ­ரை­யான காலப்­ப­கு­திக்குள் 42141 பேர்  டெங்கு நோயா­ளர்கள் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளனர். குறித்த நோயினால் பாதிக்­கப்­பட்ட  90 பேர்  இது­வ­ரையில்  இறந்­துள்­ளனர். அத­ன­டிப்­ப­டையில் இந்­நோ­யினால் கொழும்பு மாவட்­டத்தில் மாத்­திரம்  9218 பேரும் கம்­பஹா மாவட்­டத்தில் 5485 பேரும் காலி மாவட்­டத்தில் 1856 பேரும் டெங்கு நோயா­ளர்­க­ளாக இனங்­கா­னப்­பட்­டுள்­ளனர்.

மேலும் யாழ்ப்­பாண மாவட்­டத்தில் 2410 பேரும் திருக்­கோ­ண­ம­லையில் 4095 பேரும்  கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளனர். அத்­துடன் களுத்­து­றையில் 2471 பேரும் குரு­ணா­க­லையில் 1848 பேரும் டெங்கு நோயா­ளர்­க­ளாக இனங்­கா­ணப்­பட்டு சிகிச்­சைப்­பெற்­றுள்­ளனர்.

இதே­வேளை கடந்த வரு­டத்தின் முற்­ப­கு­தியில் பதி­வா­கிய  டெங்கு நோயா­ளர்­களை காட்­டிலும் இம்­முறை அதி­க­ள­வி­லான டெங்கு நோயா­ளர்கள் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளனர். கடந்த வரு­டத்தின் இது­வ­ரை­யான காலப்­ப­கு­தியில் சுமார்  16ஆயி­ரத்து 500 டெங்கு நோயா­ளர்­களே இனங்­கா­ணப்­பட்­டி­ருந்­தனர்.

இந்­நி­லையில் குறித்த டெங்கு நோயினை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு நாட­ளா­விய ரீதியில் அமைச்­சினால் விசேட  டெங்கு ஒழிப்பு  வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது. இதற்கு டெங்கு ஒழிப்பு விசேட பிரிவு  அதி­கா­ரிகள் உட்­பட பொலி­ஸாரும் கடை­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னர்.

மக்கள்  தொடர்ந்தும்  டெங்கு  நோய் குறித்து விழிப்­பு­ணர்­வுடன் செயற்­ப­டு­மாறும் காய்ச்சல் காணப்­பட்டால் உட­ன­டி­யாக வைத்­திய ஆலோ­ச­ணைனை பெற்­றுக்­கொள்­ளு­மா­றும், சுற்­றுப்­பு­றச்­சூ­ழலில் டெங்கு பரவும் கார­ணி­களை அகற்றி தூய்மையாக வைத்­தி­ருக்­கு­மாறும் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் டெங்கு நோய் பரவும் வகையிலான சூழலை வைத்திருப்போருக்கு எதிராக  சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட வுள்ளதுடன் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்  அமைச்சு  விடுத்துள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.    
இவ்வருடம் 42000 டெங்கு நோயாளர்கள் ! பலியானோர் 90.. இவ்வருடம் 42000 டெங்கு நோயாளர்கள் ! பலியானோர் 90.. Reviewed by Madawala News on 5/09/2017 04:25:00 PM Rating: 5