Ad Space avaiable

அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதா இல்லையா? நல்லாட்சிக்கு ஆதரவளித்த 49 சிவில் அமைப்புக்கள் இன்று தீர்மானம்


நல்லாட்சி அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதா இல்லையா என 49 சிவில் அமைப்புக்கள் இன்று தீர்மானிக்க உள்ளதாக அறிவித்துள்ளன.

இந்த அரசாங்கத்தினை ஆட்சிப் பீடத்தில் ஏற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய சிவில் அமைப்புக்களே இவ்வாறு தீர்மானிக்க உள்ளன.

சமூக நீதிக்கான தேசிய அமைப்பு உள்ளிட்ட 49 சிவில் அமைப்புக்கள் கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலின் போது அரசாங்கத்தை உருவாக்க  இணைந்து செயற்பட்டிருந்தன.

ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொள்ள முன்னதாக அளிக்கப்பட்ட பிரதான வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்தல், ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வித்தல், ஊழல் மோசடிகள் இன்றி நாட்டை நிர்வாகம் செய்தல், ஜனநாயகத்தை நிலைநாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை அமுல்படுத்த அரசாங்கம் இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனவே இது குறித்து தீர்மானம் ஒன்றை எடுப்பதற்காக இந்த சிவில் அமைப்புக்கள் இன்று கூட உள்ளன.புறக்கோட்டையில் அமைந்துள்ள சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைமையகத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதா இல்லையா? நல்லாட்சிக்கு ஆதரவளித்த 49 சிவில் அமைப்புக்கள் இன்று தீர்மானம் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதா இல்லையா? நல்லாட்சிக்கு ஆதரவளித்த 49 சிவில் அமைப்புக்கள் இன்று தீர்மானம்  Reviewed by Madawala News on 5/15/2017 02:15:00 PM Rating: 5