Ad Space avaiable

மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் பஸ் ஒன்றுடன் மோதியதில் 4 பேர் பலி.


பொலன்னறுவை - பெந்திவேவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இரு   மோட்டார் சைக்கிள்களில்   பயணித்த 4 பேர் உயிரிழந்தனர்.

காவற்துறையினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.

பேருந்து ஒன்றுடன்  மோட்டார் சைக்கில்கள்   ஒன்று மோதியமையே இந்த விபத்துக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலியானவர்கள் 23 முதல் 47 வயதுகளை உடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நள்ளிரவு 12.05 அளவில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில், குறித்த பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் பஸ் ஒன்றுடன் மோதியதில் 4 பேர் பலி. மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் பஸ் ஒன்றுடன் மோதியதில் 4 பேர் பலி. Reviewed by Madawala News on 5/12/2017 07:08:00 AM Rating: 5