tg travels

மஹிந்தவின் பாதுகாப்பு மேலும் 50 பேர் இன்று குறைப்பு ..

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த மேலும் 50 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இன்றும் (07) நீக்கப்பட்டுள்ளதாக அவர் தரப்பு ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதில், பொலிஸ் பரிசோதகர்கள் 2 பேரும், உப பொலிஸ் பரிசோதகர்கள் ஐவரும், பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் 3 பெரும் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.அத்துடன், 39 பொலிஸ் உத்தியோகத்தர்களும் காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கென 199 பொலிஸார் காணப்பட்டதாகவும், கடந்த சில தினங்களுக்கு முன்னர் 42 பேரும், இன்று 50 பேரும் இவர்களில் நீக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. தற்பொழுது அவரின் பாதுகாப்புக்கு 107 பேர் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


மஹிந்தவின் பாதுகாப்பு மேலும் 50 பேர் இன்று குறைப்பு .. மஹிந்தவின் பாதுகாப்பு மேலும் 50 பேர் இன்று குறைப்பு .. Reviewed by Madawala News on 5/07/2017 11:05:00 PM Rating: 5