Kidny

Kidny

டொல்பின் வேனில் 61 ஆடுகளை ஏற்றிச்சென்ற சென்றவர்கள் சிக்கினர்.



திருகோணமலை, கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி கந்தளாயில் இருந்து குருணாகல் பகுதிக்கு டொல்பின் ரக வேன் ஒன்றில் 61 ஆடுகளைச் கொண்டு சென்ற மூவர், ஞாயிற்றுக்கிழமை (14) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளனரென, பொலிஸார் தெரிவித்தனர்.  

வானின் சாரதியும் உதவியாளர்கள் இருவருமே கைதுசெய்யப்பட்டுள்ளனரெனவும் இவர்கள், குருணாகல் மற்றும் கொழும்புபைச் சேர்ந்த 40, 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.  

கால்நடைகளைத் துன்புறுத்தும் வகையில் சிறிய வானில் 61 ஆறுகளைக் கொண்டுசெல்வதாக, பொலிஸாருக்குக்  கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் பயன்படுத்திய வேன், பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதோடு, மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

டொல்பின் வேனில் 61 ஆடுகளை ஏற்றிச்சென்ற சென்றவர்கள் சிக்கினர். டொல்பின் வேனில் 61 ஆடுகளை ஏற்றிச்சென்ற சென்றவர்கள் சிக்கினர். Reviewed by Madawala News on 5/15/2017 12:24:00 PM Rating: 5