tg travels

65 சதவிகித வாக்குகளை பெற்று பிரான்ஸ் அதிபராக பதவி ஏற்கிறார் மக்ரான்.


வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரான்ஸ் அதிபர் தேர்தலில், இமானுவேல் மக்ரான்  65 சதவிகித வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்டேவின் பதவிக்காலம் நிறைவடைகிறது. புதிய அதிபரை தேர்ந்தெடுக்க இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.  தற்போதைய அதிபர்  ஹோலண்டே இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. பிரான்ஸ் மக்களுக்கு ஹோலண்டே ஆட்சி மீது  அதிருப்தி ஏற்பட்டதே அவர் தேர்தலில் போட்டியிடாததற்கு காரணம் என்று கூறப்படுகிறது.


லிபரல் சென்டிரிஸ்ட் கட்சியை சேர்ந்த இமானுவல் மக்ரான் மற்றும் வலதுசாரி தலைவர் மரின் லீ பென் தான் இத்தேர்தலின் இரண்டு நட்சத்திர வேட்பாளர்கள். மக்ரான்  65 சதவிகித வாக்குகளுடன் மரீனை வீழ்த்தி உள்ளார். பிரான்ஸ்  நாட்டின் 24-வது அதிபராக இவர் மகுடம் சூட உள்ளார்.  மக்ரான் வெற்றிபெற்றுள்ளதை தொடர்ந்து, வலிமையான எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என மரீன் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற மக்ரானுக்கு வயது 39. இவ்வளவு குறைந்த வயதில் ஒருவர் பிரான்ஸ் அதிபராவது இதுவே முதல்முறை. தேர்தல் வெற்றியை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மக்ரான், “ இந்த வெற்றி  பிரான்சிற்கான  புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக அமையும்” என்றார்.

பிரான்ஸின் புதிய அதிபராக மகுடம் சூடப் போகும் மக்ரான் பற்றி மற்றொரு ஸ்வாரஸ்யமான செய்தி...இமானுவேல் மக்ரான் தன் ஆசிரியை டிராக்னஸை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு திருமணம் நடந்த போது மக்ரானுக்கு 30 வயது, டிராக்னஸுக்கு 55 வயது. இருவருக்கும் 25 வருடங்கள் வித்தியாசம் இருந்தது.
65 சதவிகித வாக்குகளை பெற்று பிரான்ஸ் அதிபராக பதவி ஏற்கிறார் மக்ரான். 65 சதவிகித வாக்குகளை பெற்று பிரான்ஸ் அதிபராக பதவி ஏற்கிறார் மக்ரான். Reviewed by Madawala News on 5/08/2017 08:52:00 AM Rating: 5