Yahya

அம்பாறையில் 86 இடங்கள் பறிபோகும் அபாயம் !


லரீப் சுலைமான்

இறக்­காமம், மாயக்கல்லி சிலை வைப்பு விவ­காரம் கிழக்கு மாகா­ணத்தில் குறிப்­பாக, அம்­பாறை மாவட்­டத்தில் பாரிய அதிர்­வ­லையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இத்­த­னைக்கும் காரணம் தீக­வாபி பற்­றிய அச்­சு­றுத்­த­லாகும். பேரி­ன­வாதம் இலங்கை முழு­வ­தையும் சிங்­கள மய­மாக்­கு­வதில் எவ்­வ­ளவு தூரத்­திற்கு சிந்­திக்­கி­றது என்­ப­தற்கு, 2014 ஒக்­டோபர் 10 ஆம் திகதி மஹிந்த ராஜ­பக் ஷ அர­சாங்­கத்தில் அறி­விப்புச் செய்­துள்ள வர்த்­த­மானி அறி­வித்தல் தகுந்த சான்று.

காலணித்­துவவாதி­க­ளி­ட­மி­ருந்து கைமா­ற்றப்­பட்ட ஜன­நா­ய­கத்தின் சூடு தணி­வ­தற்குள் 1950 ஆம் ஆண்டு டீ.எஸ். சேன­நா­யக்க அல்லை, கந்­தளாய், மொர­வெவ, பத­வியா, கல்­லோயா முத­லான சிங்­களக் குடி­யேற்­றங்­களை வட­கி­ழக்கில் அறி­மு­கப்­ப­டுத்­தினார். கிழக்கில் ஏற்­ப­டுத்­திய கல்­லோயாத் திட்­டமும் அதை­ய­டுத்து வந்த ஆட்­சி­யா­ளர்கள் தெஹி­யத்த கண்டி, பதி­யத்­த­லாவை போன்ற சிங்­களப் பிர­தே­சங்­களை அம்­பா­றை­யுடன் இணைத்­ததால் அம்­பாறை மாவட்ட முஸ்­லிம்­க­ளுக்கு ஏற்­பட்ட இழப்பு ஆகி­யன எவ்­வ­ளவு தூரத்­திற்கு பாதிப்பை ஏற்­ப­டுத்தி வரு­கின்­றன என்­பதை சிந்­திக்­கும்­போது, எதிர்­காலம் குறித்த பீதி இப்­போ­துள்ள சிறு­பிள்­ளை­க­ளையும் நிலை­கு­லையச் செய்­துள்­ளது.

யுத்தம் முடி­வ­டைந்து மக்­க­ளெல்லாம் நிம்­மதிப் பெரு­மூச்சு விடும் இத்­த­ரு­ணத்தில் வடக்­கிலும் கிழக்­கிலும் முஸ்லிம், தமி­ழர்­களின் பூர்­வீக நிலங்கள் இலக்கு வைக்­கப்­ப­டு­கின்­றன. நாட்டில் யுத்தப் பயங்­க­ர­வாதம் முற்­றுப்­பெற்ற சம­யத்தில் அப்­போ­தி­ருந்த மஹிந்த அர­சாங்கம் இரா­ணுவ வீரர்­களை நாடு­பூ­ரா­க­வு­முள்ள சிறு­பான்மைப் பிர­தே­சங்­க­ளுக்குள் துவிச்­சக்­கர வண்­டிகள் மூலம் நுழைய வைத்து, அரச காணிகள், உறு­தி­யுள்ள காணிகள், உறு­தி­யில்­லாத காணிகள், தொல்­பொ­ரு­ளுக்­கு­ரிய இடங்கள்... என்று தங்­க­ளுக்குச் சாத­க­மாக செய­லாற்றக் கூடிய அத்­தனை தர­வு­க­ளையும் பெற்­றுள்­ளது. இதற்கு, 2014 ஒக்­டோபர் 10 ஆம் திகதி வெளி­யி­டப்­பட்­டுள்ள, 188 ஆம் அத்­தி­யாய தொல்­பொருள் கட்­டளைச் சட்டம் தகுந்த ஆதா­ர­மாகும். 

2014 ஒக்­டோபர் 10 வர்த்­த­மானி அறி­வித்தல்
குறித்த வர்த்­த­மானி, கிழக்கு மாகா­ணத்தில் தொல்­பொருள் திணைக்­க­ளத்­திற்குச் சொந்­த­மான 246 இடங்கள் பற்றி அறி­விக்­கி­றது. தேசிய மர­பு­ரி­மைகள் அமைச்சர் ஜகத் பால­சூ­ரிய கையொப்­ப­மிட்டு, மஹிந்த அர­சாங்கம் அறி­விப்புச் செய்­துள்ள இந்த வர்த்­த­மா­னியில், திருக்­கோவில் பிர­தேச செய­லாளர் பிரிவில் 36 இடங்­களும், இறக்­காமம் பிர­தேச செய­லாளர் பிரிவில் 13 இடங்­களும், ஆல­ய­டி­வேம்பு பிர­தேச செய­லாளர் பிரிவில் 9 இடங்­களும், பொத்­துவில் பிர­தேச செய­லாளர் பிரிவில் 5 இடங்­களும், அக்­க­ரைப்­பற்று பிர­தே­சத்தில் 6 இடங்­களும், அட்­டா­ளைச்­சேனை பிர­தேச செய­லாளர் பிரிவில் 11 இடங்­களும், சம்­மாந்­துறை பிர­தேச செய­லாளர் பிரிவில் 4 இடங்­களும், கல்­முனை பிர­தே­சத்தில் 2 இடங்­க­ளு­மாக முஸ்லிம், தமி­ழர்­க­ளுக்­கு­ரிய 86 இடங்கள் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. 

குறித்த வர்த்­த­மா­னியில் சிங்­களப் பிர­தே­சங்­க­ளான பதி­யத்­த­லாவை, லகு­கல, தமண, அம்­பாறை, உகன, மகா­ஓயா, தெஹி­யத்த கண்டி முத­லான இடங்­களும் உள்­வாங்­கப்­பட்­டி­ருந்­தாலும் இப்­பி­ர­தே­சங்­க­ளுக்கு குறிப்­பி­டும்­ப­டி­யான எந்தப் பாதிப்பும் ஏற்­படப் போவ­தில்லை. பிரச்­சி­னைக்­கு­ரிய இடங்­க­ளாக குறி­வைக்­கப்­ப­டு­வது முஸ்லிம், தமி­ழர்­க­ளுக்­கு­ரிய பூர்­வீக நிலங்­கள்தான் என்­பதை இன்று வட­கி­ழக்கில் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ராக இடம்­பெறும் சம்­ப­வங்­களைக் கொண்டு உறு­தி­யாகக் கூற முடியும்.

இறக்­காமம் சிலைப் பதிப்­புக்கு சூத்­தி­ர­தா­ரி­யாக செயற்­பட்­ட­தாகக் கூறப்­படும் அமைச்சர் தயா­க­மகே விடுத்­துள்ள அறிக்­கை­யொன்றில், கல்­முனை தொடக்கம் பொத்­துவில் வரைக்கும் தீக­வா­பிக்கு சொந்த­மாக 12,000 ஏக்கர் காணிகள் உள்­ளன என்று குறிப்­பிட்­டி­ருந்தார்.

தொல்­பொருள் திணைக்­களம் என்ன சொல்­கி­றது?
19 ஆம் நூற்­றாண்டின் பிற்­ப­கு­தியில் அறி­மு­க­மான தொல்­பொருள் திணைக்­களம் இலங்­கை­யி­லுள்ள அனைத்து இன மக்­க­ளுக்கும் பொது­வா­ன­தாகும். பல்­லி­னங்கள் வாழ்­கின்ற இலங்­கையில் அவ்­வி­னங்­களைச் சேர்ந்த பல மன்­னர்­களும் ஆட்சி நடத்­தி­யி­ருக்­கி­றார்கள். சிங்­கள மன்­னர்கள் முதற்­கொண்டு, எல்­லாளன் போன்ற தமிழ் மன்னன், சிற்­ற­ரசைக் கொண்ட மாகான் ராசா போன்ற  முஸ்லிம் குறு­நில மன்­னர்கள் வரைக்கும் இலங்­கையில் எந்த இனமும் குறிப்­பிட்டு உரிமை கோர முடி­யா­த­வாறு மன்­னர்கள் ஆண்­டுள்­ளார்கள்.

எனவே, இவர்­க­ளது ஆட்­சி­பீ­டங்கள், அவர்கள் பயன்­ப­டுத்­திய மட்­பாண்­டங்கள், உப­க­ர­ணங்கள், வாழி­டங்கள், தள­வாய்கள், கரு­விகள்  எல்­லாமே பாது­காக்­கப்­பட வேண்­டி­யவை. இதற்­கா­கத்தான் இலங்­கையில் தொல்­பொருள் திணைக்­களம் ஒன்றை இலங்கை அர­சாங்கம் நடை­மு­றைப்­ப­டுத்தி வரு­கி­றது. 

ஆனால், இங்கு விநோ­த­மா­னதும் அதிர்ச்­சிக்­கு­ரி­ய­து­மான விட­யம்தான் இவ்­வா­றான இடங்­களை பௌத்த மதத்­திற்­கு­ரிய வணக்­கஸ்­த­லங்­க­ளாக மாற்றும் சங்­கதி. இது எப்­படி சாத்­தி­ய­மாகும்? இதை சாத்­தி­யப்­ப­டுத்த தொல்­பொருள் திணைக்­களம் எப்­படி அனு­ம­திக்­கி­றது? தொல்­பொ­ரு­ளுக்­கென்று பிரத்­தி­யேக சட்­டங்கள் இருக்­கின்­றன. அந்த சட்­டத்தை மீறி எப்­படிச் செயற்­பட முடியும்? இறக்­காமம் சிலை வைப்புச் சம்­ப­வத்­திலும் இந்த தொல்­பொருள் திணைக்­க­ளத்தின் சட்டம் மீறப்­பட்­டுள்­ளமை கண்­கூடு. இது குறித்து வெளி­யிட்­டுள்ள தொல்­பொருள் திணைக்­களப் பணிப்­பா­ளரின் கருத்து மிக முக்­கி­ய­மா­ன­தாகும். 

'நாட்­டி­லுள்ள தொல்­பொ­ருள்­களை சாதி, சம­ய­, பே­த­மின்றி பாது­காப்­பது தொல்­பொருள் திணைக்­க­ளத்தின் கட­மை­யாகும். தொல்­பொருள் பிர­தே­சங்­களில் மதஸ்­த­லங்­களை நிறுவ வேண்டும் என தொல்­பொருள் சட்டம் தெரி­விக்­க­வில்லை எனக் குறிப்­பிட்­டுள்­ள­தோடு இறக்­காமம் மாயக்கல்லி என்ற இடத்தை மாத்­திரம் எல்­லை­யிட்டு பாது­காப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை நாம் எடுத்­துள்ளோம். சிலை வைத்­த­தற்கும் விகாரை அமைப்­ப­தற்கும் எடுக்­கப்­படும் முயற்­சிக்கும் எமக்­கு­மி­டையில் எவ்­விதத் தொடர்­பு­மில்லை" எனத் தெரி­வித்­துள்ளார். 

தீக­வாபி  ஏப்­ப­மிடும் அரக்கன்
தீக­வா­பியைப் பற்றி மகா­வம்சம் பெரு­மி­தப்­ப­டுத்திக் கூறி­யுள்­ளது. 44 ஆண்­டுகள் நீதி தவறா ஆட்சி நடத்­திய எல்­லா­ளனைக் கொன்று, புத்த மதத்­திற்கு புத்­து­யி­ர­ளித்த துட்­ட­கை­முனு, சதா­திஸ்ஸன் பற்­றிய சம்­ப­வத்தில் தீக­வாபி முக்­கிய இட­மாக கரு­தப்­ப­டு­கி­றது. சிங்­கள அப்­பாவிச் சமூ­கத்தை விடவும் மாறி வரு­கின்ற ஆட்­சி­யா­ளர்­களும் இன­வா­தத்தை கக்­கு­கின்ற கடும்­போக்­கு­வா­தி­களும் இதில் ஊறிப்­போன கருத்­து­டை­ய­வர்கள்.

வர­லாற்றுப் புகழ்­மிக்க சீகி­ரிய மற்றும் அனு­ரா­த­பு­ரத்தைப் போன்று, பொலன்­ன­று­வையைப் போன்று தென்­கி­ழக்கில் தீக­வா­பியை பெரும் நக­ர­மாக மாற்­று­வது மட்­டு­மல்ல, அதைக் கொண்­டுதான் வடக்­கு, -­கி­ழக்­குக்கு பிரச்­சினை பற்றிக் கூறு­ப­வர்­க­ளுக்கும்  தீர்க்­க­மான பதி­லடி வழங்க முடியும் என சிங்­கள மேலா­திக்க சக்­திகள் நினைக்­கின்­றன. வெளிப்­ப­டை­யாகக் கூறு­வ­தானால் பல­மாக இருக்­கின்ற சிறு­பான்மைப் பிராந்­தியம் (வடக்கும் கிழக்கும்) துண்­டா­டப்­பட்­டால்தான் தனது எதி­ரி­களை வீழ்த்த முடியும் என்று சிங்­கள மேலா­திக்­க­வா­திகள் சிந்­திக்­கின்­றனர். உல­கத்­தி­லேயே மிகப் பெரிய விகா­ரை­யாக தீக­வாபி விகாரை இருக்கும் என்ற விட­யமும் இரண்டு வரு­டங்­க­ளுக்கு முன் வெளி­யி­டப்­பட்­டி­ருந்த ஆய்வுக் குறிப்­பொன்றில் தெரி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றமை என்­பதும் இவ்­வி­டத்தில் பதிவு செய்­யப்­பட வேண்­டி­யுள்ள முக்­கிய அம்­ச­மாகும்.

இதற்­காக என்­னென்ன உரிமை மறுப்­பு­களைச் செய்­தா­வது முன்­னே­று­வதில் அம்­பாறை கச்­சேரி நிரு­வாகம் முதல் சில பௌத்த சமய, கடும்­போக்கு அர­சியல் அடி­வ­ரு­டிகள் வரைக்கும் முனைப்­புடன் செய­லாற்றி வரு­கி­றார்கள். 'யானை வரும் பின்னே மணி­யோசை வரும் முன்னே" என்­பது போன்று இதன் ஆரம்பப் படி­கள்தான் இந்த புத்தர் சிலைகள், பின்னால் வரும் அதைச் சுற்­றிய சிங்­களக் குடி­யேற்றம்.  இது இலங்கை அர­சியல் சாச­னத்தில் எழு­தப்­ப­டாத சட்­ட­மாக இருந்­தாலும் சிங்­களப் பேரின தீய சக்­தி­களின் சாச­னத்தில் எழு­தப்­பட்ட ஒரு சட்­ட­மாகும்.

தமண, இறக்­காமம், தீக­வாபி, ஒலுவில், அஷ்ரப் நகர் போன்ற பிர­தே­சங்கள் நிலத் தொடர்­புற்­றி­ருப்­பதன் அபா­யத்தை எங்­களில் எத்­தனை பேரால் உணர முடி­கி­றது? இரண்டு வரு­டங்­க­ளுக்கு முன்னர் அம்­பாறைக் கச்­சே­ரியில் தமண, இறக்­காமம், தீக­வாபி போன்ற பிர­தே­சங்­களை இணைப்­பது தொடர்­பான பேச்­சுக்கள் இடம்­பெற்று, வாதப்­பி­ர­தி­வா­தங்­க­ளுக்கு மத்­தியில் அவ்­வி­டயம் தள்ளிப் போடப்­பட்­டுள்­ள­மையும்  மூடி­ம­றைக்க வேண்­டிய விட­ய­மல்ல. லகு­க­ல­யுடன் பொத்­துவில் இணைக்­கப்­படும் நீண்­ட­கால முயற்­சியும் காலப்­போக்கில் வெற்­றி­ய­ளித்தால் தென்­கி­ழக்கு அலகுக் கோரிக்­கை­யெல்லாம் புஸ்­வா­ண­மாகிப் போகும். 

இறக்­காமம் சிலைப் பதிப்பும் உரிமை மறுப்பும்
இலங்­கையின் நீதி செத்­துப்­போ­யுள்­ளது. இறக்­காமம் சிலைப் பதிப்­புக்கு எவ்­வ­ள­வுக்கு உதவி வழங்க முடி­யுமோ அவ்­வ­ள­வுக்கு அம்­பாறை கச்­சேரி நிரு­வாகம் வசதி செய்து கொடுத்­துள்­ளது. தொல்­பொருள் பிர­தே­சங்­களில் மதஸ்­த­லங்­களை நிறுவ முடி­யாது எனக் குறிப்­பிட்­டுள்ள தொல்­பொருள் திணைக்­களப் பணிப்­பா­ளரால், சிலை பதிக்­கப்­பட்டு 6 மாதங்­க­ளா­கின்­றன, எடுக்­கப்­பட்ட சட்ட நட­வ­டிக்கை ஒன்­று­மில்லை.

சட்­டத்தை மீறி சிலையைப் பதித்­த­வர்­களை முன்னால் அமர வைத்து அம்­பாறை கச்­சேரி கூட்டம் நடத்­து­கி­றது என்றால் இதை விடக் கேவ­ல­மான உரிமை மறுப்பை வேறு எங்கு சென்று தேட முடியும்? தீர்க்­க­மான முடிவு வரும் வரைக்கும் குறித்த பிர­தே­சத்­திற்குள் யாரும் நுழையக் கூடாது என்று நீதி­மன்றம் தடை­யுத்­த­ரவு பிறப்­பித்­தி­ருந்தும் ஞான­சார தேரரும் அவ­ரது பட்­டா­ளங்­களும் அத்­து­மீறி நுழையும் வரைக்கும், இதன் மறு­தினம் நில­அ­ளவை நாயகம் உட்­பி­ர­வே­சித்து விகா­ரை­ய­மைக்க 2.5 ஏக்கர் நில­ அ­ளவை செய்யும் வரைக்கும் இலங்­கையின் நீதி­மன்றச் சட்­டமும் பொலிஸ் திணைக்­களச் சட்­டமும் என்ன தூங்கிக் கொண்­டி­ருந்­த­னவா? 
இந்த நாடு எங்கு செல்­கி­றது? இதற்­குத்தான் நல்­லாட்சி என்று பெயரா? குறித்த வர்த்­த­மா­னியில் 54 ஆவது இடத்தில் மாயக்கல்லி விவ­காரம் பற்றிக் கூறப்­பட்­டுள்­ளது. 

இறக்­காமம் மாயக்கல்லி சிலைப் பதிப்­புடன் மட்டும் இவர்­க­ளது திட்டம் நின்று விடப் போவ­தில்லை. இந்த விவ­காரம் அவர்­க­ளுக்கு வெற்­றி­ய­ளிக்­கு­மானால் அதை­ய­டுத்து இறக்­கா­மத்­தி­லுள்ள ஏனைய 12 இடங்­களும் (வர்த்­த­மா­னியில் சொல்­லப்­பட்­டுள்ள இடங்கள்) பறி­போகும் அபா­ய­மேற்­ப­டாமல் போகும் என்­ப­தற்கு என்ன உத்­த­ர­வாதம் இருக்­கி­றது?

இறக்­காமம் மக்கள் இரண்டு சவால்­க­ளுக்கு முகங்­கொ­டுத்­துள்­ளனர். ஒன்று, பதிக்­கப்­பட்ட சிலையை அகற்­று­வது. மற்­றை­யது, அரு­கி­லுள்ள காணி­களைப் பாது­காப்­பது. ஒரு­வேளை சிலையை அகற்­று­வது மிகுந்த சவால்­க­ளுக்­குள்­ளாகி அது தோல்­வியில் முடிந்து, எமது ஒட்­டு­மொத்த எதிர்ப்பின் மூலம் அரு­கி­லுள்ள காணி­களைப் பாது­காப்­பதில் எமக்கு வெற்றி கிடைத்­தாலும் அந்த வெற்றி அல்­லது தீர்­வென்­பது தலை வலிக்குப் போடு­கின்ற பனடோல் போன்­ற­தாகும். காணிச் சுவீ­க­ரிப்பு உடன் நிறுத்­தப்­ப­டலாம். ஆனால், மலை­யுச்­சியில் சிலை­யொன்று இருக்கும் வரைக்கும் புற்­றுநோய் போன்று அது தொடர் பிரச்­சி­னை­யா­கவே இருக்­கப்­போ­கி­றது என்­பது மிகவும் கசப்­பான புரி­த­லாகும். 

இறக்­காமம் அர­சி­ய­லிலும் பொரு­ளா­தா­ரத்­திலும் பல­மில்­லாத, சிங்கள பிர­தே­சங்­க­ளுக்கு மத்­தியில் இருக்­கின்ற ஒரு பரி­தா­பத்­திற்­கு­ரிய பிர­தேசம். வர்த்­த­மா­னியில் அறி­விக்­கப்­பட்­டுள்ள ஏனைய இடங்­களும் கட்டம் கட்டமாக பறிபோகுமானால் (இவற்றில் ஒரு சில இடங்கள்  ஏற்கனவே பறிபோயுள்ளன), 2014 வர்த்தமானியில் தொல்பொருள் கட்டளைச் சட்டத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள (திருக்கோவில், ஆலயடிவேம்பு, பொத்துவில், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, சம்மாந்துறை, கல்முனை) ஏனைய முஸ்லிம், தமிழ் பிரதேசங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெற வாய்ப்புகள் உருவாகலாம். எனவே, இவ்விவகாரம் ஒரு மாகாணத்திற்குரிய பிரச்சினையாகக் கொள்ளப்படல் வேண்டும்.

இறக்காமம் சிலைப் பதிப்புக்கு எதிராக 2017.04.28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அம்பாறை மாவட்டத்திலுள்ள அத்தனை முஸ்லிம் ஊர்மக்களும் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை நடத்தி ஒட்டுமொத்த எதிர்ப்பைக் காட்டியமை பிரதேசம் கடந்த எமது ஒற்றுமைக்குக் கிடைத்த வெற்றியாகும். இத்துடன் மாத்திரம் நின்று விடாது இவ்விடயத்தில் இறுதி முடிவு வரைக்கும் தொடராக பல முயற்சிகளைச் செய்ய அனைவரும் முன்வர வேண்டும்.

இவ்விடயம் குறித்து ஆழ்ந்த புலமைத்துவமுள்ள, தூரநோக்குள்ள ஆய்வுகளும் திட்டங்களும் வகுக்கப்படல் வேண்டும் புத்திஜீவிகள் சபையொன்று மாவட்ட ரீதியில் உருவாக்கப்பட வேண்டும்.

எங்களுக்கு அடுத்தவர்களது உயிர்களும் தேவையில்லை உடைமைகளும் தேவையில்லை. ஆனால், எங்களது உயிர், உடைமைகளைப் பாதுகாப்பது எமது கடமை. அது எங்களது ஈமானியக் கடமையும் கூட!

அம்பாறையில் 86 இடங்கள் பறிபோகும் அபாயம் ! அம்பாறையில் 86 இடங்கள் பறிபோகும் அபாயம் ! Reviewed by Madawala News on 5/08/2017 12:56:00 PM Rating: 5