tg travels

எந்த அரசாங்கம் வந்தாலும் பொதுபலசேனாவை முழுமையாகத் தடைசெய்துவிட முடியாது.


எந்த அரசாங்கம் வந்தாலும் பொதுபலசேனா அமைப்பினை முழுமையாகத் தடைசெய்துவிட முடியாது கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீரலி தெரிவித்துள்ளார்.

ஏறாவூர் புன்னைக்குடா வீதியில் அமைந்துள்ள பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக் கட்டிடத் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர்கள் எப்பொழுதும் பெரும்பான்மை சமூகத்தின் இனக் காவலர்களாக சித்தரிக்கப்படுவதால் எந்தவொரு அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களை முழுமையாகத் தடைசெய்து விட முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஒருமொழி பேசி, ஒரு தாய் பிள்ளைகளாக பூகோள அமைப்பில் ஒன்றாக வாழும் தமிழ் முஸ்லிம் மக்கள் இனவாதத்தை எதிர்கொள்ள தங்களுக்குள் எவ்வாறு வியூகம் வகுக்கலாம் என்பது பற்றி அமர்ந்து பேச இன்னும் தயாராக இல்லை எனவும் அமீரலி குறிப்பிட்டுள்ளார்.
எந்த அரசாங்கம் வந்தாலும் பொதுபலசேனாவை முழுமையாகத் தடைசெய்துவிட முடியாது. எந்த அரசாங்கம் வந்தாலும் பொதுபலசேனாவை  முழுமையாகத் தடைசெய்துவிட முடியாது. Reviewed by Madawala News on 5/20/2017 09:31:00 PM Rating: 5