tg travels

கண்டி பீகாஸ் கல்வி நிறுவன மாணவர்கள் இணைந்து செய்த நெகிழ்ச்சியான செயல்.


-ஜே.எம்.ஹபீஸ்- 

கண்டியில் இயங்கும் பீகாஸ் கல்வி நிறுவனத்தில் வர்த்தக முகாமைத்  துவத்திற்கான டிப்லோமா கற்கைநெறியை  (டிப்லோமா இன் பிஸ்னஸ் மெனேஜ்மென்ட்) பயின்றுவரும் ‘பீ-மெக் 14 மாணவர் தொகுதியினர்’ கண்டி சுதும்பொலை என்ற இடத்தைச் சேர்ந்த ஏ.ஜி. மகிந்த என்பவருக்கு சுமார் மூன்றரை இலட்ச ரூபா பெறுமதியுள்ள  முச்சக்கர வண்டி ஒன்றை அன்பளிப்புச் செய்தனர்(16.5.2017)

குறை மூளை வளர்ச்சியுடை பிள்ளை ஒன்றை பராமரித்துக் கொண்டு அனேக குறைபாடுகளைக் கொண்ட முச்சக்கர வண்டி ஒன்றை வைத்துக்காண்டு சிரமத்திற்கு மத்தியில் வாழ்க்யை ஓட்டும் இவரது வாழ்க்கைப் பின்னணி மிகக் கவலைக்கிடமாக இருப்பதை அவதானித்த 24 மாணவர்கள் அடங்கிய மேற்படி ‘பீ-மெக் 14’ மாணவர் தொகுதியினர் ஒன்றிணைந்து பல்வேறுபட்ட மக்களிடம் நிதி உதவிளைப் பெற்று முன்மாதிரியான ஒரு கருமத்தைச் செய்துள்ளனர்.

மேற்படி மகிந்தவின் அங்கக் குறைபாடு கொண்ட பிள்ளையையும் அவரது தள்ளாடும் வென்நிற முச்சக்கர வண்டியையும் மாணவர்களால் வழங்கப்பட்ட புதிய சிவப்பு நிற முச்சக்கர வண்டியையும் அதனை வழங்குவதற்கு உதவிய மாணவர் குழுவையும் பீகாஸ் நிறுவன கண்டிக் கிளையின் பணிப்பாளர் (தலைவர்) ஜே.எம். நிவாஸ், கண்டிக் கிளை மனேஜர் எம். முபாறக், மேற்படி செயற் திட்டத்திற்குப் பொறுப்பான சம்ரின் சரூக் உற்பட ஏனைய ஆதரவாளர்களையும் காணலாம்.

கண்டி பீகாஸ் கல்வி நிறுவன மாணவர்கள் இணைந்து செய்த நெகிழ்ச்சியான செயல். கண்டி பீகாஸ் கல்வி நிறுவன மாணவர்கள் இணைந்து  செய்த நெகிழ்ச்சியான செயல். Reviewed by Madawala News on 5/18/2017 02:35:00 PM Rating: 5