Kidny

Kidny

மத நல்லிணக்கத்தை ஏற்படுத்திய சிறுநீரக தானம் .


-அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்-

இந்தியாவில் இந்து பெண்ணின் சிறுநீரகம் முஸ்லிம் ஆணுக்கும், முஸ்லிம் பெண்ணின் சிறுநீரகம் இந்து ஆணுக்கும் பொறுத்தப்பட்ட அபூர்வ சம்பவம் புதுடெல்லி கிரேட் நொய்டாவில் அரங்கேறியுள்ளது.

கிரேட் நொய்டாவில் வசிக்கும் இக்ராம் (29) மற்றும் ராகுல் வரிஷிட் (26) இருவரும் இரு சிறுநீரகங்களும் பாதிப்படைந்து அவதிப்பட்டனர். அவர்கள் இருவருக்கும் சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

இதனால் இக்ராமின் மனைவி ராஜியாவும், ராகுலின் மனைவி பவித்ராவும் தன் கணவன்களுக்கு தங்களது சிறுநீரகத்தை தானமாக கொடுக்க முன்வந்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக இருவரது ரத்த குரூப் அவரவரகளின் கணவன்மாருக்கு ஒத்துப் போகவில்லை.

இக்ராம் மனைவி ராஜியா ரத்த குரூப் பி பாசிட்டிவ், ஆனால் இக்ராமின் ரத்த குரூப் ஏ பாசிட்டிவ். அதேபோல ராகுல் மனைவி பவித்ராவின் ரத்த குரூப் ஏ பாசிட்டிவ் ஆனால் அவரது கணவரின் ரத்த குரூப் பி. பாசிட்டிவ்
அதேவேளை ரஜியாவின் சிறுநீரகம் ராகுலுக்கு ஒத்துப் போவதாலும், பவித்ராவின் சிறுநீரகம் இக்ராமுக்கு ஒத்துப் போவதாலும் இருவரது குடும்பத்தினரிடமும் இதுகுறித்து , Senior Kidney Transplant Surgeon டாக்டர் அமித் டெர்வா விளக்கமளித்தார்.

இருவரது குடும்பமும் சிறுநீரக பரிமாற்றத்திற்கு சம்மதம் தெரிவிக்கவே அறுவை சிகிச்சை மூலம் பவித்ராவின் சிறுநீரகம் இக்ராமுக்கும், ரஜியாவின் சிறுநீரகம் ராகுலுக்கும் பொறுத்தப்பட்டன.

தற்போது ராகுல் மற்றும் இக்ராம் நலமுடன் இருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஹிந்து-முஸ்லீம் குடும்பங்களுக்கிடையிலான சிறுநீரகங்கள் வெற்றிகரமாக பரிமாற்றப்பட்டது மனித உறுப்புகள் எந்தக் குறுகிய எல்லைகளையும் கொண்டிருக்கவில்லை என்பதைக் குறிக்கிறது என்று ஜேப்பி மருத்துவமனை CEO மனோஜ் லூத்ரா தெரிவித்தார்.
மத நல்லிணக்கத்தை ஏற்படுத்திய சிறுநீரக தானம் . மத நல்லிணக்கத்தை ஏற்படுத்திய சிறுநீரக  தானம் . Reviewed by Madawala News on 5/23/2017 06:05:00 PM Rating: 5