Ad Space avaiable

காத்தான்குடி நகரசபையின் மக்கள் நல செயற்பாட்டிற்கு எமது வாழ்த்துக்கள்.

காத்தான்குடி பிரதேசத்தில் இரவு நேர தெரு விளக்குகள் அணைந்து உள்ளக வீதிகள் இருள் மயமாக
காணப்படுகின்றன.

இக் குறைபாட்டினை நிவர்த்தி செய்யும் நோக்கிலும் எதிர் வருகின்ற புனித ரமலானுடைய மாதத்தினை முன்னிட்டும்.

காத்தான்குடி நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில், வீதி மின் கம்பங்களில் அணைந்து காணப்படும் இரவு நேர தெரு விளக்குகளை அகற்றி புதிய தெரு விளக்குகளை பொருத்தும் பணியினை காத்தான்குடி நகர சபை ஆரம்பித்துள்ளது.

நகர சபையின் மக்கள் வரிப்பணத்தினூடாக இம் மக்கள் நல பணியினை முன்னெடுத்து வரும் காத்தான்குடி நகரசபையின் செயலாளர் எம்.எஸ் சபி மற்றும் நகர சபை ஊழியர்களுக்கும் காத்தான்குடி மக்களின் சார்பாக எமது நன்றிகளையும் மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

-ஹம்ஸா கலீல்-
காத்தான்குடி நகரசபையின் மக்கள் நல செயற்பாட்டிற்கு எமது வாழ்த்துக்கள். காத்தான்குடி நகரசபையின்  மக்கள் நல செயற்பாட்டிற்கு எமது வாழ்த்துக்கள். Reviewed by Madawala News on 5/19/2017 10:25:00 AM Rating: 5