Kidny

Kidny

'வாழ்வில் மாற்றம் ஏற்படுத்தும் றமழான்' ஜமாஅத்தே இஸ்லாமியின் மடவளைக் கிளை ஒழுங்கு செய்த இஸ்லாமிய நிகழ்ச்சி.


-ஜே.எம்.ஹபீஸ்-

நன்மைகள் செய்தல் என்ற அடிப்படையில் நன்மைகளின் எண்ணிக்கையைவிட நன்மையின் தரம், அகத்தாக்கம் என்பன அதிகமாக இருத்தல் வேண்டும் என்று அஷ்ஷேய்க ஹூஸ்னி முபாரக் தெரிவித்தார்.(18.5.2017)

'வாழ்வில் மாற்றம் ஏற்படுத்தும் றமழான்' என்ற தொனிப் பொருளில அகில இலங்கை  ஜமாஅத்தே இஸ்லாமியின் மடவளைக் கிளை ஒழுங்கு செய்த கூட்டம் ஒன்றிலே அவர் இதனைத் தெரிவித்தார். மடவளை ஜமாஅத்தே இஸ்லாமி தலைமையகத்தில் இடம் பெற்ற இச்சொற்பொழிவு நிகழ்வில் அவர் மேலும் தெரிவித்ததாவது-

நன்மைகள் செய்கிறோம் என்ற அடிப்படையில் பலர் பல்வேறு நற்காரியங்களைச் செய்வது நாம் காணும் அன்றாட வாடிக்கையாக உள்ளது. நன்மை செய்வது எது என்றாலும் அது வரவேற்கப்பட வேண்டியதுதான். ஆனால் இயன்றவரை நன்மைகளின் தரத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும். கணிப்பீட்டு எண்ணிக்கையை விட அவற்றின் தரம் ஆழ அகலங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும்.

புனித றமழான் காலங்களில் இரவில் நின்று வணங்குதல் என்ற அடிப்படையில் எண்ணிக்கையில் அபிப்பிராய பேதம் இருக்க முடியும். அது பற்றி எமக்குக் கவலை வேண்டாம். ஆனால் அதன் தரம் உயர்ந்ததாக இருக்க வேண்டும். உள்ளச்சம் கொண்டதாக இருக்க வேண்டும். அது ஈருலக வாழ்விற்கும் பயன் உள்ளதாக அமைய வேண்டும்.

புனித றமழானில் அதிகமதிகம் குர்ஆனை ஓதுவது வழக்கம். இது நல்லகாரியம். ஆனால் குர்ஆனில் உள்ள குறிப்பிடப்பட்ட விடயங்களை அறிந்து அதனை எமது வாழ்க்கைக்குப் பயன் உள்ளவகையில் அறிந்து தெரிந்து ஓதுவது அதனையும் விடச் சிறந்ததாகும்.

சஹ்த் இபுனு முஹாத் என்ற நபித்தோழர் இஸ்லாத்தை ஏற்று ஏழு வருடகாலம் மட்டுமே  உயிர்வாழ்ந்தார். ஆனால் அவரது மரணத்தில் எழுபதாயிரம் வானவர்கள் கலந்துகொண்டதாக ஹதீஸ்கள் உள்ளன. குறுகிய காலமானாலும் அவரது நன்மைகளின் கனதி அதிகம் என்பதை இதன் மூலம் நாம் அறிந்துகொள்ள முடிகிறது.

றமழான் நோன்பு என்பது வாக்ய்குப் பூட்டு, நாவுக்கு பூட்டு. பசிபட்டினியாக இருத்தல் என்று யாரும் நினைக்க வேண்டாம். ஐம்புலன்களுக்கும் நோன்பு கடமையாகும். பொய் உரைத்தல் மானக்கேடானவற்றை தவிர்ந்து கொள்ளல் போன்ற அம்சங்களும் அதில் சேரவேண்டும்.

காலத்திற்குக் காலம் நபிமார்கள் உலகுக்கு வந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான வணக்க வழிபாட்டு முறைகள் கொடுக்கப்பட்டிருந்தன. அனால் முன்பிருந்தவர்களுக்கும் எமக்கும் நோன்பு என்ற வணக்க வழிபாடு ஒன்றாகவே உள்ளது. எமக்கு முன்பிருந்வர்களைப் போன்றே எமக்கும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளதாக குர்ஆன் தெளிவுபடக் கூறுகிறது.

மேலும் நோன்பு எனக்குரியது. அதற்கான கூலியை நானே கொடுப்பேன் என அல்லாஹ் கூறியதாக திருமறை தெரிவிக்கிறது. இவ்வாறு பலவகைகளிலும் மேலாக ஒரு அமல் என்ற வகையில் றமழானை எதிர்கொள்ளும் நாம் தௌபா, ஸ்திஹ்பார் என்பவற்றை அதிகமதிகம் செய்ய வேண்டும். தவ்பா என்பது வேறு, ஸ்திஹ்பார் என்பது வேறு. ஸ்திஹ்பார் என்பது அடிக்கடி நாம் மாவ மன்னிப்புக் கோரிக்கொள்வதாகும். இது அதிக இலகுவாக நாம் தினமதோரும்; செய்யும் தொழிலோடும், பிரயானத்தோடும் ஏனைய கடமைகளோடும் சமகாலத்தில் சமாந்திரமாக மேற்கொள்ள முடியும். இதனால் அடுத்தவருக்கு இடைஞ்சல் ஏற்படாது. மௌனமாக அஸ்தஹ்பிருல்லாஹ் என்ற மொழியலாம்.

ஆனால் தௌபா என்பது கடந்த காலத்தில் தன்னால் ஆன தவறுகளை நினைத்து மனம் உருகி அத்தவரை இனிமேல் செய்யமாட்டேன் என வாக்குறுதி அளித்து இறைவனிடம் பிழைபொருத்து அருளுமாறு மன்றாடுவதாகும். இது தனிமையில் சுஜூது போன்ற வணக்கங்களில் அல்லது நடுநிசித் தொழுகைகளினூடாக நிறைவேற்றலாம்.

அப்ரஹாவின் படை கஃபாவைத் தாக்கவந்த போது அப்துல் முத்தலிப் மனமுருகி இறைவனிடம் ஒப்படைத்தார்கள். அது திரை இன்றி ஒப்புக்கொள்ளப்பட்டது. அதன் விளைவாக யானைப்படை சிதரடிக்கப்பட்ட வரலாற்றை குர்ஆன் அழகாகக் கூறுகிறது. இன்று எம்மை நோக்கி வீரப்புப் பேசும் தலைக்கனம்பிடித்த பேரின வாதிகளுக்கு அப்ரஹாவின் படை சிதரடிக்கப்பட்ட வரலாற்றை சொல்லிக்கொடுக்கும்படி ஒரு அறிஞர் கூறினார். அப்படியான ஒரு வரலாற்று நூல் மூலம் அதனை அவர்களுக்குப் புகட்டலாம்.
தர்மங்களில் உயர்ந்தது கொடுத்தல் பண்பாகும். நபி (ஸல்) காலத்தில் ஒரு ஏழையின் வீட்டு முற்றத்தில் ஈத்தம் பழம்கள் வந்து விழுவதன் காரணமாக அந்த ஈத்தம் பழங்கள் தனது குடும்பத்திற்கு உரித்தற்றது என்பதனால் அந்த மரத்தை வெட்டி விடும் படி பெரிய ஈத்தம் தோப்பிற்கு அதிபதியான ஒருவரிடம் கேட்டும் அவர் அதனைச் செய்யாத கட்டத்தில் அந்த ஒரு மரத்திற்காக 600 பேரீத்தம்பழங்கள் கொண்ட தனது ஈத்தம்பழத் தோப்பையே பகரமாக தாரை வார்த்த அபூதர்ராஹ் என்ற நபித்தோழரின் வரலாற்றை வாசித்தப் பாருங்கள்.

நாம் நோற்கும் நோன்பின் விளைவாக உலக மக்களும், எமது நாட்டு மக்களுக்கும் நன்மை அடையவேண்டும். அவர்களுக்கு அது நிம்மதியை ஏற்படுத்தவேண்டும் என்ற வகையில் நாம் நோன்பு நோற்பது மட்டுமல்லாது அதற்காகப் பிராத்திக்கவும் வேண்டுமென்று குறிப்பிட்டார்.
 
'வாழ்வில் மாற்றம் ஏற்படுத்தும் றமழான்' ஜமாஅத்தே இஸ்லாமியின் மடவளைக் கிளை ஒழுங்கு செய்த இஸ்லாமிய நிகழ்ச்சி. 'வாழ்வில் மாற்றம் ஏற்படுத்தும் றமழான்' ஜமாஅத்தே இஸ்லாமியின் மடவளைக் கிளை ஒழுங்கு செய்த இஸ்லாமிய நிகழ்ச்சி. Reviewed by Madawala News on 5/19/2017 08:00:00 PM Rating: 5