Kidny

Kidny

மோடியின் வருகை இலங்கைக்குப் பாதிப்பா ??


மோடி!! இந்தப் பெயரைக் கேட்டவுடன் பெரும்பாலான இந்திய முஸ்லிம்களுக்கு வாயில் ஒரு மூன்றெழுத்துக் கெட்ட வார்த்தை வரும். ஏனென்று கேட்கிறீர்களா வேறொன்றுமில்லை அவர் செய்த சாதனைகள் ச்சீ.. அவர்களுக்குச் செய்த வேதனைகள் அப்படி. குஜராத்தில் ஒரே நாளில் 3000 முஸ்லிம்களை கொன்று குவித்ததில் தொடங்கி பட்டியலிட்டால் பக்கவாதமே வந்துவிடும் அளவுக்கு அந்த "மகான்" முஸ்லிம்களுக்கு இழைத்த கொடுமைகள் ஏராளம் ஏராளம்.

மோடி என்கிற ஒரு டீக்கடைக்காரன் எப்படி இந்தியாவின் பிரதமர் ஆனான் என்பதைக் கொஞ்சம் ஆழமாகத் தோண்டிப் பார்த்தால், ஆசிய நாடுகளில் தோண்டினால் தண்ணீர் கிடைப்பதைப் போல மத்திய கிழக்கில் பெற்றோல் கிடைப்பதைப் போல, இங்கே "மதத்துவேஷம்" என்கிற பொருள் கொஞ்சம் அதிகமாகவே கிடைக்கும். ஆர்.எஸ்.எஸ் எனும் இந்தியாவின் மிகப்பெரிய மதவெறி இயக்கத்தின் கடைமட்ட ஊழியனாகச் சேர்ந்து, மதத்துவேஷம் எனும் வஸ்துவை ஏணியாகப் பயன்படுத்தி இவ்வளவு பெரிய உயரத்தை எட்டியிருக்கிறார் மோடி.

அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் அரசியல் தலைவர்களைப் பொறுத்தவரை முன்னாள் பொருளியல் நிபுணர்கள், சட்ட மேதைகள், படித்தவர்கள், சிந்தனையாளர்கள் என்று ஒரு பட்டியல் நீளும். ஆனால் தெற்காசிய நாடுகளளில் அரசியல் தலைவர்களைப் பொறுத்தவரை முன்னாள் கைதிகள், கொலைகாரர்கள், திருடர்கள், டீக்கடைக்காரர்கள், மொள்ளமாரிகள், முடிச்சவிக்கிகள் என ஒரு கருப்புப் பட்டியல் தனது வெள்ளைப் பல்லைக் காட்டி இழித்துக்கொண்டிருக்கும். அந்தப் பட்டியலின் டொப் லிஸ்ட் பிரபலம் தான் இந்த மோடி. ஆக.. இந்தியாவின் முன்னாள் டீக்கடைக்காரனும் இலங்கையின் முன்னாள் விவசாயியும் சந்திக்கின்ற நிகழ்வு கோடிகளில் ஏற்பாடு செய்யப்பட்டு நாளை இடம்பெறக் காத்திருக்கிறது.

மோடி வந்தாலும் சரி, ராகுல் காந்தி வந்தாலும் சரி, மைத்திரியைச் சந்தித்தாலும் சரி, ரணிலைச் சந்தித்தாலும் சரி, இலங்கை மக்களாகிய எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் "வர்த்தமானி கைய்யெழுத்துப் புகழ்" மாண்புமிகு மைத்திரி ஐயா அவர்கள் பழக்கதோசத்தில் சீபா(CEPA), எட்கா(ETCA) போன்ற இந்திய நலன்சார் ஒப்பந்தங்களில் கைய்யெழுத்திட்டு இலங்கை தொழிலாளர் வர்க்கத்தின் தலையில் மண்ணள்ளிப்போட்டு விடாமல் வெறும் வெசக் வைபவத்தோடு முடித்துக்கொண்டால் எல்லாம் சுபம் தான்.

-Mohamed Zakee-
-kalawewa-
மோடியின் வருகை இலங்கைக்குப் பாதிப்பா ?? மோடியின் வருகை இலங்கைக்குப் பாதிப்பா ?? Reviewed by Madawala News on 5/11/2017 07:57:00 PM Rating: 5