tg travels

நாபீர் பெளண்டேசனுடன் கைகோர்த்த சம்மாந்துறை பிரதேச மகளிர் அமைப்புக்கள்…


-ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் -

அம்பாறை மாவட்டத்தில் பல சமூக சேவைகளை செய்து வரும் நாபீர் பெளண்டேசனானது அன்மையில் சம்மாந்துறை பிரதேசத்தில் இயங்கிவருகின்ற மகளிர் அமைப்புக்களை சந்தித்திருந்தது. பெளண்டேசனின் இஸ்தாபக தலைவர் பொறியியலாளர் அல்-ஹாஜ் உதுமான்கண்டு நாபீரின் தலைமையில் சம்மாந்துறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த சந்திப்பில் நூற்றுக்கும் அதிகமானோர் மகளிர் அமைப்புக்களை பிரதி நிதித்துவப்படுத்தி பிரசன்மாயிருந்ததினை அவதானிக்க கூடியதாக இருந்தது.
மிகவும் வெற்றிகரமாக நடை பெற்ற குறித்த மகளிர் அமைப்புக்களுடனான சந்திப்பில் பிரதேசத்து மகளிர் அமைப்புக்கள் நாபீர் பெளண்டேசனுடன் கைகோர்த்து எதிர் வருகின்ற காலங்களில் நாபீர் பெளண்டேசன் முன்னெடுக்கின்ற அரசியல் நடவடிக்கைகளுக்கு ஒத்துளைப்பு வழங்குவதாக பெளண்சேசனின் இஸ்தாபக தலைவரிடம் வாக்குறுதி அளித்தமை முக்கிய விடயமாகும்.
குறித்த சந்திப்பில் உரையாற்றிய நாபீர் பெளண்டேசனின் இஸ்தாபக தலைவர்…  நாபீர் பெளண்டேசனானது அரசியல் அதிகாரம் இல்லாதிருக்கும் இந்த சூழ்நிலையில் மகளிர் அமைப்புக்களை பிரதி நிதித்துவப்படுத்துகின்ற ஒவ்வொரு தனி நபருக்கும் தனிப்பட்ட முறையில் உதவிகளை செய்வதென்பது முடியாத காரியமாகும். ஆனால் எங்களால் தற்பொழுது உங்களுக்கு வழங்க கூடியதாக உள்ள உதவிகளை நீங்கள் உங்களுக்குள் முன்னிலைப்படுத்தி யாருக்கு வழங்க வேண்டும் என்பதனை எங்களிடன் ஒத்துளைப்புடன் தெரிவிக்கும் பட்ச்சத்தில் அதனை நாங்கள் செய்வதற்கு தயாராக இருப்பதோடு மேலும் பல உதவிகளை மேற்கொண்டு செய்வதற்கும் அது பெரும் உதவியாக இருக்கும்.
அது மட்டுமல்லாமல் எங்களிடம் அரசியல் அதிகாரம் வருகின்ற பொழுது நாங்கள் முழு மூச்சாக செயற்பட்டு உங்களுடைய குறைகளையும், தேவைகளையும், தனிப்பட்ட ரீதியில் கரிசனையுடன் செயற்பட்டு அதற்கான தீர்வினை பெற்றுக்கொடுக்க தயாரக இருக்கின்றோம். அரசியல் காலங்கள் வருகின்ற பொழுது வியாபாரிகள் உங்களிடத்தில் வந்து ஆயிரம் அல்லது இரண்டாயிரங்களை கொடுத்து வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு செல்வார்கள். ஆனால் அவர்கள் மீண்டு உங்களை பார்க்க வருவது அடுத்த தேர்தல் காலத்தில் என்பதனை நான் கூறி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
அவ்வாறு இம்முறை அவர்கள் மீண்டும் உங்களிடத்தில் வாக்குறுதி வழங்குவதற்கு வருவார்கள் என்றால் நீங்கள் அவர்களை உங்களின் கால்களில் உள்ள செருப்புக்களால்தான் அடித்து விரட்ட வேண்டும். அது அவர்களுக்கு மட்டுமல்ல.! அதே பிழையினை நாபீர் பெளண்டேசனும் செய்ய முற்படுமானால் எங்களையும் நீங்கள் செருப்பால் அடித்து விரட்ட வேண்டும் என்பதே எனது வேண்டுகோளாக இங்கே கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
நாங்கள் எவ்வளவு கஸ்டத்துக்கு மத்தியில் வாழ்ந்தாலும் எமது பிள்ளைகளுக்கு கல்வியினை கொடுத்து அவர்களை சமூதயத்தில் உருவாக்க வேண்டிய கட்டாய தேவைப்பாடும் எங்களுக்கு இருக்கின்றது. கல்வியினை எமது பிள்ளைகளுக்கு கொடுப்பது காசு சம்பாதிக்கின்ற குறிக்கோளாக மட்டும் கையில் எடுத்து செயற்படாமல் ஒரு படித்த சமூதாயத்தினை கட்டி எழுப்புவதற்கான அடித்தளமாக  இருக்க வேண்டும்.
அது மார்க்க கல்வியாக இருந்தாலும் சரி.! உலக கல்வியாக இருந்தாலும் சரி.! அதனை நாங்கள் எமது பிள்ளைகளுக்கு கொடுப்பது எமது கடமையாகும். அதே போன்று தேர்தல் காலங்களில் உங்களிடத்தில் வாக்கு பிச்சை கேட்டு வருகின்ற வியாபாரிகளுக்கும் நீங்கள் சிறந்ததொரு அரசியல் கலாச்சாரமிக்க அரசியல் கல்வியினை கொடுக்கின்ற அல்லது அவர்களை தெளிவுபடுத்துகின்ற சமூதாயமாக மாற வேண்டும் என உரையாற்றினார் அல்-ஹாஜ் உதுமான்கண்டு நாபீர்.
மகளிர் அமைப்புக்களுடனான நாபீர் பெளண்டேசனி சந்திப்பினுடைய காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

வீடியோ மகளிர் அமைப்புக்களின் வாக்குறுதி -
நாபீர் பெளண்டேசனுடன் கைகோர்த்த சம்மாந்துறை பிரதேச மகளிர் அமைப்புக்கள்… நாபீர் பெளண்டேசனுடன் கைகோர்த்த சம்மாந்துறை பிரதேச மகளிர் அமைப்புக்கள்… Reviewed by Madawala News on 5/11/2017 11:47:00 AM Rating: 5