Yahya

ஆட்சிகள் மாறுகின்றனவே ஒழிய இனவாத காட்சிகள் மாறுவதில்லை.


Muja ashraff 
மதங்களுக்கிடையிலான புரிதலின்மையினால் தோற்றம் பெறுவதுவே மதப்பிரிவினைவாதமும், இனவாதமும். இவற்றின் அடுத்த நகர்வுகளே மதரீதியான மோதல்களும் இனரீதியான முறுகல்களும்.

இவை இரண்டும் எப்போது அரசியல் ரீதியாக பரிணமிக்கின்றனவோ அப்போது பெரும்பான்மை இனமாக வசிக்கக்கூடிய சமூகத்தின் திருப்திக்காக சிறுபான்மை இனத்தின் உயிர்களும், உடமைகளும், உரிமைகளும்,காவுகொள்ளப்படுகின்றன.

தனிச் சிங்கள சட்டம் என்ற கருப்பொருளை மையப்படுத்தி ஆட்சியினை தனதாக்கிய SWRD பண்டார்நாயக்கவின் காலத்தில் தீவிரம் பெற்ற இச்சித்தாந்தங்களின் விளைவுகளை நன்கு உணர்ந்து கொண்ட தந்தை செல்வநாயகம் தமது இனத்தின் உரிமைகளை முன்னிருத்திய செயற்பாடுகளில் இரங்கத்தொடங்கினார். இருந்தும் அவற்றை பொருட்படுத்தாத பேரினவாதம்  JR ஜெயவர்தனவின் காலத்தில் அரிசியலமைப்பு ரீதியாக ஒர் இனத்திற்கான முன்னுரிமை என்ற போர்வையில் முழுமைப்படுத்தப்பட்டது.

இனியும் தமது உரிமைகளை அஹிம்சை வழியாக பெற்றுக்கொள்ள முடியாது என தீர்மானித்த தமிழ் சமூகம் ஆயுத வழியினை தேர்தடுத்தது. அதன் ஆரம்பமே யாழ்பாண நகர மேயர் துறையப்பாவின் முதற்கொலை அன்று தொடங்கிய ஆயுதப்போராட்டத்தின் தீவிரம் 1983ம் வருடம் யாழ்ப்பானத்தில் நிலைகொண்டிருந்த றாணுவ வீரர்களின் மரணத்தோடு கருப்பு ஜூலையாக மாற்றம்பெற்றது.

அந்த நிகழ்வின் பாரதூரத்தை ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் அனுபவிக்கத்தொடங்கியது அதன் வடுவே பிற்பட்ட காலங்களில்  ஆயுதப்
போராட்டத்தை வலுப்பெறச்செய்தது.
அதன் பாதிப்புகளிலிருந்து மீள்வதற்கு மூன்று தசாப்தங்களை இந்த நாடு இழந்திருந்தது. தமிழ் சமூகத்தின் உரிமைகள் ஒடுக்கப்பட்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பிற்பாடு பேரினவாதத்தின் பார்வைகளோ முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து நகர்த்தபட்டது.

ஆடம்பரமும், செல்வச்செழிப்புடனும் நகர்புறங்களனைத்தையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த அந்த சமூகத்தின் வளர்ச்சியினை கண்டு பொறுக்க முடியாத அப்போதைய பாதுகாப்புச்செயலாளர் ஆட்சியினை தக்கவைத்திருந்த தனது அண்ணனிடமிருந்து மிதமிஞ்சிய அதிகாரங்களை பெற்றுக்கொண்டு நகர அபிவிருத்தி என்ற போர்வையில் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கக்கூடிய  பகுதிகளை குறிவைத்தே காய்களை நகர்தத்தொடங்கினார்.

தொடர்ந்து  முஸ்லிம்களின் வர்த்தக செயற்பாடுகளை முடக்குவதற்கும் அதற்கான ஆதரவினை பெற்றுக்கொள்ளவதற்கும் அவர் தேர்ந்தடுத்த வழியே பௌத்த தீவிரவாதம்.

இன மத ரீதியான பேதங்களையும் முறுகல்களையும் உருவாக்குவதன் மூலம் சிறுபான்யினரை அடக்கி ஒடுக்கி ஆட்சி நடத்தலாம் என்ற கருப்பொருளினை மறைமுகமான நிகழ்ச்சி நிரலாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டதே பொதுபல சேனா. அதன் செயற்பாடுகளுக்கான ஆதரவுத்தளம் அதிகாரவர்க்கத்தின் மூலம் தங்கு தடையின்றி வழங்கப்பட  நாட்டில் உள்ள மதஸ்தலங்கள் எங்கும் தாக்குதல் தொடுக்கப்பட்டன,

தம்புள்ளை பள்ளிவாசலினை அகற்றும் பணிகளும், முஸ்லிம்களின் உரிமைகளுக்கான குரல்வலைகளை  நசுக்கும் பணிகளும் பகிரங்கமாக இடம்பெற்றன. தொடர்ச்சியான முறையில் இனவாதம் தூண்டப்பட்டதன் விளைவு அலுத்கம, பேருவளை போன்ற பகுதிகள் களவர பூமியாக்கப்பட்டு கோடிக்கனக்கான சொத்துகள் கொள்ளையடிக்கப்பட்டன. துப்பாக்கி சன்னங்களால் இளைஞ்ஞர்கள் பலரும் அங்கவீனமாக்கப்பட்டனர், முன்னிலை வகிக்கும் வர்த்தக நிலயங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

நாடங்கும் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்ற அதிர்ச்சியிலும், அச்சத்திலும் உறைந்து போய் இருக்க சிறுபான்மை இனத்தின் உள்ளங்களில் நம்பிக்கையினை ஏற்படுத்தும் வகையில் ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறிகள் தென்பட்டு ஆட்சியும் மாற்றம் பெற்றது.

கடந்த ஆட்சியின் போது இடம்பெற்ற கசப்பான பல சம்பவங்களால் விரக்தியின் உச்ச கட்டத்தில் இருந்த சிறுபான்மை இன மக்களுக்கு ஆட்சியில் ஏற்பட்ட மாற்றமும் அதன் ஆரம்ப கட்ட முன்னடுப்புகளும்  சற்று நம்பிக்கை அளிக்கும் விதமான தோற்றப்பாடுகளை ஏற்படுத்தியதன்பதே உண்மை. இருந்தும் அடுத்து வந்த காலப்பகுதிகளில் சற்று அடங்கி வாசித்த இனவாதமும், ஞானம் இல்லா தேரவாதமும் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்து இன்று தீவிரமாக இயங்க தொடங்கி விட்டன

சிறுபான்மை மீதான வசைபாடல்களும், வன்முறையினை தூண்டும் விதமான பேச்சுக்களும், வில்பத்து, மாயக்கல்லி மீதான பகிரங்க அபகரிப்பும், மதஸ்தலங்கள் மீதான தாக்குதல்களும் இதன் அங்கங்களே

இவை தொடர்பான விடயங்கள் பரவலான அடிப்படையில் தெளிவூட்டப்பட்ட பின்னரும் கூட தமது ஆட்சியினை தக்கவைத்துக்கொள்ள வேண்டுமனில் பெரும்பான்மை இனத்தை திருப்திப்படுத்தும்  செயற்பாடுகளில் முன்னிலை வகிப்பது இனவாதமே என்பதால் அவை தொடர்பான விடயங்களை கன்டும் காணாததுபோல்  வேடிக்கை பார்க்கின்றனர் அதன் ஆட்சியாளர்கள்

ஆட்சிகள் மாறினாலும் ஆட்சியாளர்களின் உள்ளங்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் இனவாத தீ உள்ளவரை இது போன்ற பல ஞானம் இல்லா தேரர்களின் உருவாக்கமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். இதில் மஹிந்த ஆட்சி மைத்ரி ஆட்சி என்ற வேறுபாடுகள் கிடையாது.
ஆட்சிகள் மாறுகின்றனவே ஒழிய இனவாத காட்சிகள் மாறுவதில்லை. ஆட்சிகள் மாறுகின்றனவே ஒழிய இனவாத காட்சிகள் மாறுவதில்லை. Reviewed by Madawala News on 5/23/2017 12:21:00 PM Rating: 5