tg travels

இலங்கையில் இனவாத தீ பரவி வருகின்றது.. வாய் பேச்சுக்களை, விதண்டாவாதங்களை தவிர்த்துக்கொள்வோம்.


அன்பின் இஸ்லாமிய சகோதர்களே!

எமது நாடு இன்று ஒரு ஆபத்தான கால கட்டத்தில் இருக்கின்றது.

இனவாத தீ நாடெங்கும் பரவி வருகின்றது,

பல்வேறு இடங்களில் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தவண்ணம்  உள்ளன,

நாளை இனவாத தீயினால் எமது சமூகம் கருகிப்போகலாம், விலை மதிக்க முடியாத உயிர்கள் பறிபோகலாம்,

நாம் சிந்தித்து செயலாற்ற வேண்டிய காலம், நாம் சற்று பொறுமையாக இருக்க வேண்டிய காலம்,

வாய் பேச்சுக்களை, விதண்டாவாதங்களை தவிர்த்துக்கொள்வோம்,

முக்கியமாக முகநூல்களில் விமர்சனங்கள், கேலிச்சித்திரங்கள்,அவர்கள் சம்மந்தப்பட்ட அருவருக்கத்தக்க புகைப்படங்கள் என்பவற்றை பதிவிடுவதை தவிர்த்துக்கொள்வோம்,

வெளிநாடுகளில் இருந்துகொண்டு - முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் இருந்துகொண்டு  உணர்ச்சி வசமான பதிவுகள், கமெண்ட்கள் போடுபவர்கள் சிதறிவாலும் எமது சகோதரங்களைப்பற்றி சற்று கவனத்தில்  கொள்ளுங்கள்,

கட்சிகளுக்கிடையிலான போட்டியும், பகைமையும் எமது சமூகத்தை சிந்திக்கவிடாமல் தடுக்கின்றது,

நாம் பகைமையை மறப்போம்,

கட்சி பேதங்களை மறப்போம்,

நாளைய எமது சந்ததிகளின் எதிர்காலத்தைப்பற்றி சிந்திப்போம்,

நாளைய எமது இருப்பை, எமது பாதுகாப்பை பற்றி சிந்திப்போம்,

எமது அரசியல் தலைமைகளை விமர்சிக்கும் காலம் இதுவல்ல,

அவர்களை நாம் விமர்சித்து அவர்களின் சிந்தனைகளை திசை மாற்றும் நேரம் இதுவல்ல,

உலகின் வரலாறுகள், தற்போதைய முஸ்லிம்களின் சிதைவுகள் எமது கண்களுக்கு  காட்சியாக தெரிகின்றது,

எமது சமூகத்தின் அழிவின் ஆரம்ப்பத்தை உங்கள் கைகளால் திறந்து வைத்துவிடாதீர்கள்,

இனவாதம் பற்றிக்கொண்டாள் அந்த தீயில் கருகிப்போவது எமது சமூகம்தான்,

உலக நாடுகள், இஸ்லாமிய நாடுகள் பெரிதாக எதனையும் சாதித்துவிட முடியாது,

பக்கத்து காஷ்மீர் அழிவை பாகிஸ்தானால் கட்டுப்படுத்த முடியாது,

பக்கத்து ரோஹிங்க்யாவின் அழிவை  மலேசியாவாலும் இந்தோனேசியாவாலும்  கட்டுப்படுத்த முடியாது,

ஈராக்கையும், சிரியாவையும்,பலஸ்தீனையும், ஆப்கானையும் இஸ்லாமிய நாடுகள் பாத்து காக்க தவறிவிட்டன,

எமது நாட்டில் ஏற்படும் அழிவை தடுப்பதற்கு எவரும் முன்வரமாட்டார்கள் என்பதற்கு  பல முன்னுதாரணங்கள் எம்மிடம் உள்ளன,

எனவே  ஒன்றுபடுவோம், ஒருமைப்படுவோம்,வீண் வம்புகள், வீறாப்புகள்,விமர்சனங்கள் தவிர்ப்போம்,

எமது தலைமைகளை - அவர்களின் கரங்களை பலப்படுத்துவோம்

நாளைய எமது சமூகத்தை, எமது சந்ததியினரை இந்த மண்ணில் கண்ணியமாக, கெளரவமாக, அச்சமின்றி வாழ்வதற்கான அனைத்து தியாகங்களையும், விட்டுக்கொடுப்புகளையும் செய்வோம்,

அதுவே நாட்டுக்கும் நல்லது, எமக்கும் நல்லது.

-Uwais abusalah. -
இலங்கையில் இனவாத தீ பரவி வருகின்றது.. வாய் பேச்சுக்களை, விதண்டாவாதங்களை தவிர்த்துக்கொள்வோம். இலங்கையில் இனவாத தீ பரவி வருகின்றது.. வாய் பேச்சுக்களை, விதண்டாவாதங்களை தவிர்த்துக்கொள்வோம். Reviewed by Madawala News on 5/21/2017 04:46:00 PM Rating: 5