Yahya

ஆச்சரியத்தையும் கவலையையும் தந்த முஸ்லிம் சகோதரி... அனைத்து ஆண்களும் இதனை சிந்திப்பீர்களா? #இலங்கை.


அண்மையில் எமது அலுவலகத்தின் சக ஊழியர்களுக்கு ஒரு முஸ்லிம் பெண், சில உணவுப் பண்டங்களை விற்பனை செய்து கொண்டிருந்தார்.
அந்தப் பெண்ணைக் கண்டதும் எனக்கு மிகுந்து ஆச்சரியமாக இருந்தது.
அவர் எனக்கு நன்கு அறிமுகமான ஒரு வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்.

இவருக்கு இப்படி ஒரு தொழில் செய்ய எந்த அவசியமுமில்லையே
இவர்களுக்கு இருக்கும் வசதிக்கு எதற்காக இவ்வளவு கஷ்டப்பட்டு இந்தப் பெண் தொழில் செய்ய வேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.
அடுத்த நாள் அந்தப் பெண்ணின் உறவினர் ஒருவரைத் தொடர்பு கொண்டு அவர் ஏன் இப்படியொரு தொழில் செய்கிறார் என்று கேட்டேன்
அப்போது அவர்....

அந்தப் பெண்ணின் கணவர் உயிரிழந்து ஒரு வருடமாகிறதாம், அதற்குப் பிறகுதான் இந்தப் பெண் இப்படி உணவுப் பொருற்கள் விற்பனை செய்யத் தொடங்கி இருக்கிறார் என்றார்.

ஒரு பெண் தொழில் செய்வதோ,உணவுப் பொருற்களை விற்பனை செய்வதோ, ஒன்றும் இழிவான விடயமல்ல. யாரிடமும் கையேந்தாமல் சுயமாக சம்பாதித்து உண்பது மிகவும் வரவேற்கத்தக்க ஒரு விடயம்.
ஆனால் இங்கே நாம் சிந்திக்க வேண்டிய ஒரு இடம் இருக்கிறது.
எனக்குத் தெரிந்த வகையில் கார், பங்களா ஹஜ், உம்ரா என்று மிக வசதியாக வாழ்ந்த பெண் அவர்.

அவருடைய கணவர் ஒரு பிரபலமான வியாபாரியாக இருந்தவர்.
கணவன் உயிரோடிருக்கும் பொழுது
ராணி மாதிரி வாழ்ந்தவர்.

ஆனால் தனக்கு ஏதும் நடந்தால் தனது மனைவியின் எதிர்காலம் குறித்து இவர் கொஞ்சமேனும் சிந்தித்ததில்லை.

வாழும்போது ஒரு பொறுப்புள்ள கணவனாக மனைவிக்குரிய சகல கடமைகளையும் சரியாக செய்திருக்கிறார்.

அனால் அவர் இறந்ததும் அவரது வியாபாரம் மற்றும் சொத்துக்கள் அனைத்ததையும் அவரது சகோதரர்கள் முழுமையக கைப்பற்றி விட்டார்கள்.
அதன் பின்னர்தான் இந்தப் பெண் இப்படி ஒரு தொழில் செய்ய வேண்டிய நிலைக்கு ஆளாகி இருக்கின்றார்.

உண்மையில் எல்லா ஆண்களும் கொஞ்சம் சிந்திக்க வேண்டிய இடம் இது
எமது நடைமுறை வாழ்க்கையின் சில சௌகரியங்களுக்காக எமது பெண்கள் தொழில் செய்வதை நிறுத்திவிடுகின்றோம்.

அதேபோல் எமது சில சில்லரைக் காரணங்களுக்காக அவர்களது ஆற்றல்கள் ஆசைகள் அனைத்தையும் முடக்கிக் கொண்டு வாழ்வதற்கு நிர்பந்திக்கின்றோம்.

ஆனால் இந்த நிர்ப்பந்தங்களால் முடக்கப்படும் ஒரு பெண்ணுக்கு தனியாக வாழவேண்டிய ஒரு நிலை வந்தால் அவள் என்ன செய்து கொள்வாள் என்று நாம் பலமுறை சிந்திக்க வேண்டி இருக்கிறது.

எமது சொத்துக்கள், எமது தொழில், வருமானம் போன்ற அனைத்து விடயங்கள் குறித்தும் மனைவிக்கு ஒரு சரியான அறிவை நாம் வழங்கியிருக்க வேண்டும்.

எமக்கு ஒரு நோய் அல்லது ஒரு திடீர் இழப்பு ஏற்பட்டால் எமது தொழில் அல்லது சொத்துக்கள் மூலம் மனைவிக்கு ஒரு நிரந்தர வருமானத்தை பெற்றுக் கொளவதற்கான வழியை நாம் காட்டிக் கொடுக்க வேண்டும்.
ஏன் என்றால் எமது சமூகத்தைப் பொருத்தவரையில் ஒரு மனைவியை இழந்த கனவனுக்கு இன்னுமொரு திருமணம் முடிப்பதுகூட இலகுவான விடயம் ஆனால் கணவனை இழந்த மனைவிக்கு அப்படியல்ல
ஏனவே நமது பெண்களும் "எனக்கு எல்லாம் அவருதான்" என்று பெருமை பட்டுக் கொள்வதோடு நின்றுவிடாமல், சொந்தக்காலில் நிற்கக்கூடிய ஆளுமை மிக்க பெண்களாக தங்களை வளர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

அதேபோல் வாழும்போது மனைவியை நன்றாக வைத்திருப்பதுபோலவே, தனக்கு ஒரு நாேய் அல்லது இழப்பு ஏற்பட்டால் தமது மனைவியின் எதிர்காலம் குறித்து சிந்தித்து ஒரு சரியான வழியை அமைத்துவைப்பதும் ஒரு கணவனின் மிக முக்கிய பொறுப்பாக இருக்கின்றது.
அப்போதுதான் இந்த "விதவை" என்ற சொல் சமூகத்துக்கு ஒரு பாரமான சொல்லாக இருக்காது.

-சப்வான் பஷீர் -
ஆச்சரியத்தையும் கவலையையும் தந்த முஸ்லிம் சகோதரி... அனைத்து ஆண்களும் இதனை சிந்திப்பீர்களா? #இலங்கை. ஆச்சரியத்தையும் கவலையையும் தந்த முஸ்லிம் சகோதரி... அனைத்து ஆண்களும் இதனை சிந்திப்பீர்களா? #இலங்கை. Reviewed by Madawala News on 5/11/2017 12:33:00 PM Rating: 5