Ad Space Available here

கற்பழிக்க முயன்ற சாமியாரின் ஆணுறுப்பை மாணவி துண்டித்தது தவறு.. போலீசிடம் முறையிட்டு இருக்கவேண்டும்.


பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சாமியாரின் பிறப்பு உறுப்பை இளம்பெண் துண்டித்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பேசுபொருளாக மாறியுள்ளது.

கேரள தலைநகர் திருவனந்தபுரம் அருகே உள்ள பேட்டை பகுதியை சேர்ந்த 23 வயது சட்டக்கல்லூரி மாணவி கடந்த வெள்ளியன்று தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கணேசானந்தா தீர்த்தபாடம் என்கிற ஹரிசுவாமி (வயது 54) என்ற சாமியாரின் பிறப்பு உறுப்பை கத்தியால் துண்டித்தார். இதனையடுத்து திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்ந்த சாமியாருக்கு அறுவை சிகிச்சை மூலம் சிறுநீர் குழாய் சீரமைக்கப்பட்டது. இதற்கிடையே நடந்த சம்பவம் குறித்து இளம்பெண் பேட்டை போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் சாமியார் ஹரிசுவாமி குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அவருக்கும், சட்டம்பி சுவாமி ஆசிரமத்துக்கும் தற்போது எந்த தொடர்பும் இல்லை என ஆசிரம நிர்வாகிகள் தெரிவித்தனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் அந்த ஆசிரமத்தில் சேர்ந்த அவர், பின்னர் அங்கிருந்து விலகிவிட்டதாக அவர்கள் கூறினர். இந்த சம்பவம் குறித்து மேலும் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த இளம்பெண் 12–ம் வகுப்பிலிருந்தே சாமியாரின் இந்த கொடுமைக்கு ஆளாகி வந்ததாக தெரிய வந்தது. எனவே குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்பு சட்டப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் சாமியார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

எனினும் தனது பிறப்பு உறுப்பை தானே துண்டித்ததாக போலீசாரிடம் சாமியார் ஹரிசுவாமி தெரிவித்தார். கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த குற்றத்தை மறைக்க முயன்றதாக இளம்பெண்ணின் தாய் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே தன்னை கற்பழிக்க முயன்ற சாமியாரின் பிறப்பு உறுப்பை துண்டித்த அந்த இளம்பெண்ணுக்கு பாராட்டுகள் குவிகிறது.

இச்சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் பேசுகையில், மாணவி சாமியாரின் பிறப்பு உறுப்பை துண்டித்ததற்கு பதிலாக காவல்துறையிடம் சென்று இருக்க வேண்டும் என கூறிஉள்ளார். “ இதுபோன்ற விரைவான தீர்ப்பினால் மனநிறைவு இருக்கலாம், ஆனால் சட்டத்தை கையில் எடுப்பதைவிட மாணவி காவல்துறையிடம் பிரச்சனையை எடுத்துச் சென்று இருந்தால் சிறப்பானது.” என்னுடைய அனுதாபங்கள் மாணவியுடன் உள்ளது, அதிகமான மக்கள் அவருக்கு ஆதரவாக உள்ளனர். ஆனால் நீதி கிடைக்கவேண்டிய ஒரு சமூகமானது நமக்கு அவசியம், ஒவ்வொரு தனிமனிதனும் கத்தியை கையில் எடுக்க கூடாது என கூறிஉள்ளார் சசி தரூர்.
கற்பழிக்க முயன்ற சாமியாரின் ஆணுறுப்பை மாணவி துண்டித்தது தவறு.. போலீசிடம் முறையிட்டு இருக்கவேண்டும். கற்பழிக்க முயன்ற சாமியாரின் ஆணுறுப்பை மாணவி துண்டித்தது தவறு.. போலீசிடம் முறையிட்டு இருக்கவேண்டும். Reviewed by Madawala News on 5/21/2017 01:23:00 PM Rating: 5