Ad Space avaiable

ஜ‌னாதிப‌தியும் பிர‌த‌ம‌ரும் நாட்டில் இல்லாத‌ இந்த‌ வார‌த்தில் முஸ்லிம்க‌ள் எத்த‌கைய‌ ஹ‌ர்த்தால் ந‌ட‌வ‌டிக்கைக‌ளையும் ந‌ட‌த்த‌ வேண்டாம்.


ஜ‌னாதிப‌தியும் பிர‌த‌ம‌ரும் நாட்டில் இல்லாத‌ இந்த‌ வார‌த்தில் முஸ்லிம்க‌ள் எத்த‌கைய‌ ஹ‌ர்த்தால் ந‌ட‌வ‌டிக்கைக‌ளையும் ந‌ட‌த்த‌ வேண்டாம் என‌ உல‌மா க‌ட்சி கேட்டுக்கொண்டுள்ள‌து.

இது ப‌ற்றி உல‌மா க‌ட்சி தெரிவித்துள்ள‌தாவ‌து,

ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌ கால‌த்தில் அவ‌ர் வெளிநாடு சென்றிருந்த‌ ச‌ம‌ய‌மே அளுத்க‌ம‌ தாக்குத‌ல் ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌து. ஜ‌னாதிப‌தி இல்லாமை இன‌வாதிக‌ளுக்கு இல‌குவாகி விட்ட‌து. ஆனாலும் அந்த‌ நேர‌த்தில் ஜ‌னாதிப‌தியின் ச‌கோத‌ர‌ர் பெசில் ராஜ‌ப‌க்ஷ‌ ஓர‌ள‌வு அதிகார‌ம் கொண்ட‌வ‌ராக‌ இருந்த‌தால் க‌ல‌வ‌ர‌ம் அளுத்க‌மைக்கு அப்பால் செல்லாம‌ல் த‌டுத்த‌தோடு ஒரே இர‌வில் அத‌னை முடிவுக்கு கொண்டு வ‌ந்தார்.

இந்த‌ அர‌சில் பிர‌த‌ம‌ரும் ஜ‌னாதிப‌தியும் அதிகார‌ம் உள்ள‌வ‌ர்க‌ளாக‌ இருக்கும் நிலையில் இருவ‌ரும் வெளிநாடு சென்றிருக்கும் நிலையில் இருவ‌ரின் அதிகார‌த்துக்கும் செல்வாக்குள்ள‌ எவ‌ரும் அர‌சில் இல்லை.

இந்த‌ நிலையில் முஸ்லிம்க‌ளின் ஹ‌ர்த்தாலின் போது வேண்டுமென்றே இன‌வாதிக‌ள் தீ செய‌லில் ஈடுப‌ட்டால் அது க‌ல‌வ‌ர‌மாக‌லாம். அத‌ன் பின் நாங்க‌ள் நாட்டில் இருந்திருந்தால் இது ந‌ட‌க்க‌ அனும‌தித்திருக்க‌ மாட்டோம் என‌ இருவ‌ரும் சொல்ல‌ இட‌முண்டு.

ஆக‌வே இது விட‌ய‌த்தில் முஸ்லிம் ச‌மூக‌ம் உல‌மா க‌ட்சியின் க‌ருத்தை ஏற்று பிர‌த‌ம‌ரும் ஜ‌னாதிப‌தியும் இல்லாத‌ இந்த‌ வார‌ம் எத்த‌கைய‌ எதிர்ப்பு ந‌ட‌வ‌டிக்கைக‌ளிலும் ஈடுப‌டாது தொட‌ர்ந்தும் பொறுமையாக‌ இருக்கும்ப‌டி கேட்டுக்கொள்கிறோம்.

- மௌல‌வி முபாற‌க் அப்துல் ம‌ஜீத்-
ஜ‌னாதிப‌தியும் பிர‌த‌ம‌ரும் நாட்டில் இல்லாத‌ இந்த‌ வார‌த்தில் முஸ்லிம்க‌ள் எத்த‌கைய‌ ஹ‌ர்த்தால் ந‌ட‌வ‌டிக்கைக‌ளையும் ந‌ட‌த்த‌ வேண்டாம். ஜ‌னாதிப‌தியும் பிர‌த‌ம‌ரும் நாட்டில் இல்லாத‌ இந்த‌ வார‌த்தில் முஸ்லிம்க‌ள் எத்த‌கைய‌ ஹ‌ர்த்தால் ந‌ட‌வ‌டிக்கைக‌ளையும் ந‌ட‌த்த‌ வேண்டாம். Reviewed by Madawala News on 5/23/2017 08:40:00 AM Rating: 5