Kidny

Kidny

இன்று காலை நால்வரின் உயிரைப் பறித்த விபத்து. உயிரிழந்தவர்கள் விபரம்.


இன்று அதிகாலை பொலொன்னறுவை பெந்திவெவ்வ பகுதியில் இடம்பெற்ற பாரிய வாகன விபத்தில் 4 பேர் உயிரிழந்தது அறிந்ததே.

2 மோட்டார் சைக்கிளில் சென்ற 4 பேர் மீது பயணிகள் பஸ் ஒன்று மோதியதில் இந்த 4 பேரும் உயிரிழந்துள்ளனர்.

மூன்று பெரும்பான்மை இன சகோதரர்கள் உயிரிழந்த நிலையில்,  இவர்களில் ரிகாஸ் எனும் 16 வயது இளைஞரும் வபாத்தாகி உள்ளார்.

இவர் பரகஹதெனிய, பஞ்சிகாவத்தையை சேர்ந்த ரிஸ்வான் என்பவரின் மகனாவார்.

இவர்கள் தற்போது குருநாகல் தல்கஸ்பிட்டிய பகுதியில் வசித்து வருகின்றனர்.

-அல்மஷூறா/ மடவளை  நியூஸ்.
இன்று காலை நால்வரின் உயிரைப் பறித்த விபத்து. உயிரிழந்தவர்கள் விபரம். இன்று காலை நால்வரின் உயிரைப் பறித்த விபத்து. உயிரிழந்தவர்கள் விபரம். Reviewed by Madawala News on 5/12/2017 02:29:00 PM Rating: 5