Ad Space avaiable

குழந்தை சல்மான் கடத்தல்.. தீவிரமாக தேடப்பட்டு வந்த லீடர் சரணடைந்தார்.


இரண்டரை வயதுச்சிறுவன் சல்மானை கம்பளையிலிருந்துச் கடத்திச்சென்று, மட்டக்களப்பு கரடியனாறில் வீடொன்றில் மறைத்து வைத்து, 30 லட்சம் ரூபா கப்பம் கோரிய குற்றச்சாட்டில், இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், இக்குழுவுக்கு தலைமை தாங்கி, அதன் முக்கிய சூத்திரதாரியாக செயற்பட்டு, தலைமறைவாகியிருந்த "அஷாத்" என்பவரை கண்டுபிடிக்க உதவுமாறு பொதுமக்களை நேற்று கோரியிருந்தோம்.

இந்நிலையில், இன்று காலை 8 மணியளவில் குறித்த நபர் கம்பளை பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார். இதனால், எதிர்வரும் 18ம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த வழக்கை தங்குதடையின்றி முன்னெடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
குழந்தை சல்மான் கடத்தல்.. தீவிரமாக தேடப்பட்டு வந்த லீடர் சரணடைந்தார். குழந்தை சல்மான் கடத்தல்.. தீவிரமாக தேடப்பட்டு வந்த லீடர் சரணடைந்தார். Reviewed by Madawala News on 5/15/2017 11:03:00 AM Rating: 5