Ad Space avaiable

விகாராதிபதி தேரரின் வாகனத்தை வழிமறித்து தாக்குதல். தேரர் வைத்தியசாலையில். மூவர் கைது.


பண்டாரவளை - ஹில்ஓய புராண விகாரையில் தலைமை பிக்கு மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் 3 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதல் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட தலைமை பிக்கு மத நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு வாகனத்தில் திரும்பும் வழியில் அதனை மறித்த சிலர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதனால் வாகன சாரதியும் காயமடைந்துள்ளார்.

 காயமடைந்த பிக்கு, பண்டாரவளை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். சந்தேகத்தில் கைது செய்யபட்டவர்கள் விபரம் வெளியிடப்படவில்லை.
விகாராதிபதி தேரரின் வாகனத்தை வழிமறித்து தாக்குதல். தேரர் வைத்தியசாலையில். மூவர் கைது. விகாராதிபதி தேரரின் வாகனத்தை வழிமறித்து தாக்குதல். தேரர் வைத்தியசாலையில். மூவர் கைது. Reviewed by Madawala News on 5/21/2017 01:35:00 PM Rating: 5