Kidny

Kidny

முஸ்லிம்களின் வணக்கஸ்தளங்கள் மீதான தாக்குதலுக்கு அமேரிக்கா கண்டனம்.


இலங்கையில் முஸ்லிம்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான மதரீதியான தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருப்பது அறிந்ததே.. இந்நிலையில் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்க தூதரகம் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளது. இன்று அதிகாலை குருநாகல் மல்லவபிட்டிய ஜும்மா பள்ளி மீதான தாக்குதலை மேற்கோள் காட்டி,

"வணக்கஸ்தளங்கள் மீதான எந்தத் தாக்குதலும் கண்டிக்கத்தக்கது . இது இந்தவாரம் மூன்றாவது தாக்குதல் ஆகும். அதிகாரிகள் குற்றவாளிகளை விரைவிலேயே கைது செய்ய முயற்சி செய்வார்கள் என்று நான் நம்புகிறேன்" என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேஷ்யப் தனது உத்தியோகபூர்வ ட்விட்டரில் அறிவித்துள்ளார்.
முஸ்லிம்களின் வணக்கஸ்தளங்கள் மீதான தாக்குதலுக்கு அமேரிக்கா கண்டனம். முஸ்லிம்களின் வணக்கஸ்தளங்கள் மீதான தாக்குதலுக்கு அமேரிக்கா கண்டனம். Reviewed by Madawala News on 5/21/2017 10:06:00 AM Rating: 5