Ad Space avaiable

ரயிலுடன் இராணுவ வாகனம் மோதி கோர விபத்து.


பாறுக் ஷிஹான்-

  சாவகச்சேரி சங்கத்தானையில்   புகையிரதம்- இராணுவ ட்ரக் வண்டி  விபத்து  ஒன்று இடம்பெற்றது.

இன்று (11) 2.30 மணியளவில் யாழ்ப்பணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கடுகதிப் புகையிரதமும் பிரதான வீதிக்கு செல்வதற்காக  புகையிரதக் கடவையை கடந்து செல்ல  முற்பட்ட  இராணுவ ட்ரக் வாகனமும் ஒன்றுடன் ஒன்று   மோதி கொண்டன.


இதனால் இராணுவ ட்ரக் வாகனத்தில் பயணித்த 5 இராணுவத்தினர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

 சங்கத்தானை ரயில் நிலையத்தில் இருந்து சுமார்  இருநுாறு மீற்றர் துாரத்தில் இராணுவ வாகனத்தை ரயில் இழுத்து சென்றதாக நேரில் பார்த்தவர்கள் குறிப்பிட்டனர்.

மேலும்    இவ்விபத்தினால்  போக்குவரத்து பாதிப்புகள் எற்பட்டுள்ளது.


 
ரயிலுடன் இராணுவ வாகனம் மோதி கோர விபத்து. ரயிலுடன் இராணுவ வாகனம் மோதி கோர விபத்து. Reviewed by Madawala News on 5/11/2017 04:07:00 PM Rating: 5