Yahya

இன்று நாட்டில் ஏற்படுகின்ற பல பிரச்சினைகளின் பின்னணியில் ராஜபக்ச குழுவினரே காணப்படுகின்றனர்.-ஜே.எம்.ஹபீஸ்-

இன்று நாட்டில் காணப்படுகின்ற அனேக பிரச்சினைகளின் பின்னணியில் ஆட்சிபீடம் ஏற வேண்டும் என்ற பேராசைகொண்ட ராஜபக்ச குழுவினரே காணப்படுவதாக முன்னாள் மத்திய மாகாண சபை அங்கத்தவரும் தேசிய ஐக்கிய முன்னணியன் தலைவருமான ஆசாத் சாலி தெரிவித்தார்.

கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.(13.5.2017) அவர் மேலும் கூறியதாவது-

நாட்டில் அடிக்கடி பல்வேறு புரளிகள் ஏற்படுகின்றன. அதில் புதிதாக முஸ்லிம்களை சீண்டுவதற்கு பேரீத்தம்பழப் புரளி ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. பேரீத்தம் பழங்களுக்கு இன்று நேற்றல்ல. எட்டு வருடங்களுக்கு முன்பிருந்தே வரி அறவிடும் நடை முறை உண்டு.

அதற்கு வரி விதிக்காவிட்டால் கசிப்பு தயாரித்தலுக்கும் அதனைப் பயன் படுத்துவார்கள். எனவே சாதாரண பாவனையாளர்களுக்கு வரி விதிப்பு புதிய விடயமல்ல. அதே நேரம் சவுதி அரேபியா போன்ற நாடுகள் பேரீத்தம் பழத்தை அன்பளிப்புச் செய்வதும் உண்டு. அதற்கு அரசுடன் கதைத்து வரியற்ற விதத்தில் பெற்றுக் கொள்ளும் நடை முறை தொடர்ந்து காணப்படுகின்றது.

இதே போல் 'சைட்டம்' பிரச்சினை புதிததாக ஆரம்பித்தது போல் காட்டப்படுகிறது. இதுவும் அதேபோல்தான். முன்னை ஆட்சியாளர் சைட்டமுக்கான அடிக்கல்லை நாட்டிவைத்தார்கள். இன்று வேண்டாம் என்கின்றார்கள்.

அதேபோல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எண்ணைக் குதத்தை கொள்வனவு செய்யவே இங்கு வருவதாகவும் கறுப்புக்கொடி கட்ட வேண்டும் என்றும் பொது மக்களை தூண்டி விட்டு மறுபுறமாக அவருடன் பேச்சுவார்தை நடத்திய முன்னாள் தலைவரும் இருக்கத்தான் செய்கிறார். வெளியே போது அம்மக்கள் முன் மோடி வேண்டாம். இரகசியமாக அவருடன் கதைக்க முடியும். இது மக்களை தூண்டிவிடும் நாடகமாகும்.

அதேபோல் திருகோணமலை எண்ணெய்க்குதம் பற்றி செய்தியும் உள்ளது. இரண்டாம் உலகமகா யுத்த காலத்தில் அமைக்கப்பட்ட குதங்கள் சும்மா கைவிடப்பட்டுக் காணப் படுகின்றன. அவற்றை குத்தகைக்கு வழங்குவதால ;எமக்கு வருமானம் வருகிறது. அதேநேரம் போதிய கையிறுப்பை வைத்துக்கொள்ளவும் முடியும். அதற்காகாக திருகோணமலை துறைமுகத்தை விற்பதாக பொய் கூறி மக்களை திசை திருப்பு கின்றனர்.

இன்று நாட்டில் எதை எடுத்தாலும் சைட்டம் ஒரு பிரச்சினையாகி விட்டது. புகையிரதம் ஓட்டும் சாரதிக்கும் சைட்டம் பிரச்சினைக்கும் என்ன தொடர்பு. ஒரே தொடர்பு ஆட்சியைக் கவிழ்த்து மகிந்தவை மீண்டும் கொண்டு வர எடுக்கும் மறைமுக சதியின் வெளிப்பாடே இதுவாகும்.

நாட்டில் இன்னும் 25 சைட்டங்கள் உருவாக வேண்டும். இலங்கையில் வைத்தியர்களுக்கும் நோயாளர்களுக்குமான விகிதாசாரம் நீண்ட இடைவெளியியுடன் காணப் படுகிறது. அது இன்னும் குருக வேண்டும். ஆயிரம் பேருக்கு ஒரு வைத்தியராவது உருவாக வேண்டும்.

காலையில் சைட்டம் வேண்டாம் என போராட்டம் செய்பவர்கள் மாலையில் செனலிங் சென்றரில் சேவையைப் பெற செல்கின்றனர். அப்படியாயின் அங்கு போய் ஏன் காத்திருக்கிறீர்கள். தனியார் வைத்தி சாலைக் கல்வி கூடாது என்றால் தனியார் வைத்தியர்கள் ஏன் உருவாகக் கூடாது. தனிப்பட்ட முறையில் படிப்பது இலவச வைத்திய கோட்பாட்டை மீறுவதாயின் செனலிங் முறையில் இலவச வைத்திய முறை மீறப்பட வில்லையா? இலவசக் கல்விக்குப் பாதிப்பு என்று கூறுவதாயின் இலங்கைப் பல்கலைக்கழகத்தை மூடிவிட்டா சைட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்று பாராளுமன்றில் எமக்காகக் குரல் கொடுக்க அனுப்ப்பபட்ட 21 எம்.பி மார் உள்ளனர். அவர்களை 21 ஊமைகள் என்று அழைக்கவேண்டும். அவர்களது மௌனம் கலைவதே இல்லை. ஒரு முஸ்லிம் அமைச்சரிடம் என்ன கேட்டாலும் தம்பியிடம் கேளுங்கள் என்கிறார். அப்படியாயின் தனது தம்பியையே பாராளுமன்றம் அனுப்பி அமைச்சராக்கி இருக்கலாமே என்றார்.

இந்தியாவில் இருந்து பட்டதாரி ஆசிரியர்களை மலையகப் பாடசாலைகளுக்கு கொண்டு வரப்போவதாக அரசு கூறும் அதே நேரம் கிழக்கு மாகாண தமிழ் பட்டதாரிகள் தமக்கு வேலைகேட்டு ஆர்பாட்டம் செய்கின்றனர். ஏன் கிழக்கு மாகாண பட்டதாரிகளை மலையகத்திற்கு ஆசிரியர்களாக நியமிக்க முடியாது?
சந்திரிகா அம்மையார் காலத்தில் ஒரு மேலதிக ஆசனத்துடன் ஆட்சி நடந்தது. எனவே இன்னும் சில தினங்களில் ஆட்சியைக் கவிழ்க்கலாம் எனக் கனவு காணவேண்டாம் என்றார்.


இன்று நாட்டில் ஏற்படுகின்ற பல பிரச்சினைகளின் பின்னணியில் ராஜபக்ச குழுவினரே காணப்படுகின்றனர். இன்று நாட்டில் ஏற்படுகின்ற பல பிரச்சினைகளின் பின்னணியில் ராஜபக்ச குழுவினரே காணப்படுகின்றனர். Reviewed by Madawala News on 5/14/2017 09:57:00 AM Rating: 5