Ad Space avaiable

அரச காணியை ஆக்கிரமித்து தனக்குச் சொந்தமாக்கிய நபர்.. இன்று அரசுடமையாக்கப்பட்டது. #காத்தான்குடி போலிஸ் பிரிவில்


காத்தான்குடி போலிஸ் பிரிவில் தனிநபர் ஒருவரினால் அடைக்கப்பட்ட  தோணாக் காணி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற உத்தரிவின்பேரில் இன்று அரசுடமையாக்கப்பட்டது.

18.5 பேர்ச் அளவுள்ள இந்த அரச காணியை பல வருடங்களாக தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து அதனை அடைத்து தனக்குச் சொந்தமாக்கியுள்ளார்.

இந்த சட்டவிரோத நடவடிக்கைக்கு எதிராக காத்தான்குடி பிரதேச செயலகம் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்து.

அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம், குறித்த காணி அரசாங்கத்துக்கு சொந்தமானது என தீர்ப்பளித்தது.

இதையடுத்து, குறித்த காணி ஆக்கிரமிப்பாளரிடமிருந்து மீட்கப்பட்டு, அரசுடமையாக்கப்பட்டது.
அரச காணியை ஆக்கிரமித்து தனக்குச் சொந்தமாக்கிய நபர்.. இன்று அரசுடமையாக்கப்பட்டது. #காத்தான்குடி போலிஸ் பிரிவில் அரச காணியை ஆக்கிரமித்து  தனக்குச் சொந்தமாக்கிய நபர்..  இன்று அரசுடமையாக்கப்பட்டது. #காத்தான்குடி போலிஸ் பிரிவில் Reviewed by Madawala News on 5/09/2017 07:20:00 PM Rating: 5