tg travels

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் புகழிடங்கள் மீது தாக்குதலை நடத்துவோம்..


பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் புகழிடங்கள் மீது தாக்குதலை நடத்துவோம் என ஈரான் கடும் எச்சரிக்கையை விடுத்து உள்ளது.

கடந்த மாதம் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஈரானில் நடத்திய தாக்குதலில் 10 ஈரான் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். இது ஈரானை கடும் கோபம் அடைய செய்துள்ளது. பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ் அல் அத்ல் என்ற பயங்கரவாத இயக்கம்தான் தாக்குதல் நடத்தியதாக ஈரான் கூறியுள்ளது.

பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தும் என நாங்கள் நம்புகிறோம் என கூறியுள்ள ஈரான் இல்லையெனில் நாங்கள் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இது தொடர்பில் ஈரான் ராணுவ மேஜர் ஜெனரல் முகமது பக்ரி குறிப்பிடுகையில் , “இப்போது நிலவும் சூழ்நிலையை ஏற்றுக் கொள்ள முடியாது. பாகிஸ்தான் எல்லை நிலவரத்தை கட்டுப்படுத்தும் என எதிர்பார்க்கிறோம்.பயங்கரவாதிகளை கைது செய்யும், பயங்கரவாத முகாம்களை மூடும் என நம்புகிறோம். பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்தால், பாகிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் பயங்கரவாத புகழிடங்கள் மீது நாங்கள் தாக்குதல் நடத்துவோம், பயங்கரவாதிகள் எங்கிருந்தாலும் தாக்குதல்தான் நடக்கும்,” என கூறியுள்ளார். 

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் புகழிடங்கள் மீது தாக்குதலை நடத்துவோம்.. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் புகழிடங்கள் மீது தாக்குதலை நடத்துவோம்.. Reviewed by Madawala News on 5/08/2017 06:47:00 PM Rating: 5