Ad Space avaiable

ஹக்கீம் மற்றும் ரிஷாத் உள்ளிட்ட எம் பிக்கள் குழு சட்டம் ஒழுங்கை அமைச்சருடன் விஷேட கலந்துரையாடல் ..


நாட்டில் தற்போது இடம்பெற்றுக்கொண்டுள்ள இனவாத செயற்கள் தொடர்பில் சட்டம் ஒழுங்கு அமைச்சருடனான முக்கிய கலந்துரையாடல் ஒன்று அலறி மாளிகையில் இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் அமைச்சர்கள் ஹக்கீம், ரிஷாத், ஹலீம் , கபீர் ஹாசிம், பைஸர் முஸ்தபா, பவுசி ஆகியோருடன் பா உறுப்பினர்கள் மரிக்கார் முஜீபுர் ரஹ்மான் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

நிலமை தற்போது எல்லை மீறி செல்வதாக அங்கு முஸ்லிம் எம்பிக்கள் சட்டம் ஒழுங்கு அமைச்சருக்கு சுட்டிக்கட்டியுள்ள அதேவேளை இதனை உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருமாறும் அரசுக்கு வழங்கப்படும் கடைசி வாய்ப்பாக நினைத்து நிலமையை கட்டுப்பட்டுக்குள் கொண்டுவருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இனவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த விஷேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் நாளை மறுதினத்துக்குள் இவை பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் என சட்டம் ஒழுங்கு அமைச்சர் உறுதி அளித்துள்ளதாக அறிய முடிகிறது.

நாளை மறுதினம் இந்த குழு மீண்டும் அமைச்சரை சந்திக்கும் போது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்
தொடர்பில் விளக்கம் அளிக்கப்படுமென அமைச்சர் சாகல தெரிவித்துள்ளதாக அறிய முடிகிறது.



ஹக்கீம் மற்றும் ரிஷாத் உள்ளிட்ட எம் பிக்கள் குழு சட்டம் ஒழுங்கை அமைச்சருடன் விஷேட கலந்துரையாடல் .. ஹக்கீம் மற்றும் ரிஷாத் உள்ளிட்ட எம் பிக்கள் குழு சட்டம் ஒழுங்கை அமைச்சருடன் விஷேட கலந்துரையாடல் .. Reviewed by Madawala News on 5/22/2017 03:37:00 PM Rating: 5