Kidny

Kidny

களுத்துறை கல்வி வலயத்தில் முதலிடத்தை பெற்ற தர்கா நகர் பெண்கள் தேசிய பாடசாலை மாணவியர் மற்றும் ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு ..


தர்கா நகர் பெண்கள் தேசிய பாடசாலை மாணவிகள் சென்ற வருடம் க.பொ.த. (சா/த) பரீட்சையில் 87% சித்தியைப் பெற்று, களுத்துறை கல்வி வலயத்தில் முதலிடத்தை பெற்றுக்கொண்டார்கள். 

இதற்காக சித்தியடைந்த மாணவியர்களையும், கற்பித்த ஆசிரியர்களையும் கெளரவிக்கும் நிகழ்வு பாடசாலை கேர்போர் கூடத்தில் பாடசாலை அபிவிருத்தி சங்க ஏற்பாட்டில் 23 /05 /2017செவ்வாய்க்கிழமை பாடசாலை அதிபர் ஜெனாப் ஜாபிர் தலைமையில் நடைபெற்றது. 

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி ரூமி ஹாஷிம், கெளரவ அதிதியாக பேருவளை கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு சிறிலால் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள். 

மேலும் அதிதிகளாக “ட்ரூ வெலூ” நிறுவன பணிப்பாளர்கள், பேருவளை பிரதேச சபை முன்னால் உறுப்பினர் பதியுதீன், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஹசீப் மரிக்கார் மற்றும் அல்ஹாஜ் ஜாஸுக் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

தர்கா நகர் பெண்கள் தேசிய பாடசாலையானது இலங்கையின் முதல் பெண்கள் தேசிய பாடசாலை என்பது குறிபிடத்தக்கது.


 

களுத்துறை கல்வி வலயத்தில் முதலிடத்தை பெற்ற தர்கா நகர் பெண்கள் தேசிய பாடசாலை மாணவியர் மற்றும் ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு .. களுத்துறை கல்வி வலயத்தில் முதலிடத்தை பெற்ற தர்கா நகர் பெண்கள் தேசிய பாடசாலை மாணவியர் மற்றும் ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு .. Reviewed by Madawala News on 5/24/2017 06:29:00 AM Rating: 5