Ad Space avaiable

வெள்ளவத்தை பிரதேசத்தில் உடைந்து விழுந்த மாடிக் கட்டடத்தின் உரிமையாளர் கைது ..

 
கொழும்பு வெள்ளவத்தை பிரதேசத்தில் உடைந்து விழுந்த மாடிக் கட்டடத்தின் உரிமையாளர் பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெள்ளவத்தை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 62 வயது நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். அவரை இன்று கல்கிஸ்ஸை நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளவத்தை, சார்லிமண்ட் ஒழுங்கையில் அமைந்திருந்த ஏழுமாடிக் கட்டடம் கடந்த 18ஆம் திகதி சரிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்ததுடன், சுமார் 21 பேர்வரை காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது. 

வெள்ளவத்தை பிரதேசத்தில் உடைந்து விழுந்த மாடிக் கட்டடத்தின் உரிமையாளர் கைது .. வெள்ளவத்தை பிரதேசத்தில் உடைந்து விழுந்த மாடிக் கட்டடத்தின் உரிமையாளர் கைது .. Reviewed by Madawala News on 5/21/2017 07:37:00 AM Rating: 5