tg travels

அறிக்கைவிட்டது போதும் முஸ்லிம்மக்களின் பாதுகாப்பையாவது உறுதி செய்யுங்கள்.

காலாகாலமாக தொடரும் இனவாததீயில் கருகிக்கொண்டு இருக்கும்முஸ்லிம் அப்பாவி சமூகத்தின் மீதுஅக்கறை இருந்தால் நீங்கள்யாரோடும் மோத தேவையில்லைமக்களின் பாதுகாப்பையாவதுஉறுதிசெய்யுங்கள் முஸ்லிம்பிரதிநிதிகளே.


இனவாத கருத்துக்களைபெரும்பாண்மை இளைஞர்களிடம்கக்கியுள்ள பொதுபலசேனாதொடர்பிலும் ஞானசாரதொடர்பிலும் எந்தவிதநடவடிக்கையும் எடுக்காதஜனாதிபதி மற்றும்பிரதமரைக்கொண்ட ஆட்சியில்உங்கள் பதவிக்காகவும்இருப்புக்காகவும் நீங்கள் வாய்மூடிமௌனிகளாக இருந்தது போதும்எம் மக்களின் புனித ரமழான் மாதகடமைகளை இனிதே செயற்படுத்தமுஸ்லிம் மக்களின் பாதுகாப்பைஉறுதிசெய்ய நடவடிக்கைஎடுங்கள்.


பெரும்பாண்மையின மக்களுக்குமத்தியில் வசிக்கும் முஸ்லிம்களின்மதஸ்தலங்கள், கடைத்தொகுதிகள், குடியிருப்புக்கள் போன்றவற்றுக்கும்ரமழான்கால மார்க்கவிடயங்களுக்கும் தீங்கு ஏற்படாதவண்ணம் பாதுகாப்பை வழங்கஜனாதிபதி மற்றும் பிரதமரைகோருங்கள். 


வெறுமனே அரசியல்வாதிகளைமட்டும் நம்பியிராமல் அகிலஇலங்கை ஜமியத்துல் உலமா, முஸ்லிம் கவுன்சில், தேசிய ஷூராகவுன்சில், முஸ்லிம்சட்டத்தரணிகள் அமைப்பு மற்றும்அனைத்து சமூகநலஅமைப்புக்களும் இது தொடர்பில்அரசாங்கம் மற்றும் பாதுகாப்புஅமைச்சிடம் கோரிக்கைவிடுக்கவேண்டும். 


அஷ்ரப் 

அக்கரைப்பற்று.

அறிக்கைவிட்டது போதும் முஸ்லிம்மக்களின் பாதுகாப்பையாவது உறுதி செய்யுங்கள். அறிக்கைவிட்டது போதும் முஸ்லிம்மக்களின் பாதுகாப்பையாவது உறுதி செய்யுங்கள். Reviewed by Madawala News on 5/23/2017 12:19:00 AM Rating: 5