Kidny

Kidny

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரிப்பட்டப்படிப்புக்கான மாணவர் அனுமதிப் பரீட்சை சட்டத்திற்கு முரணானது! விரிவுரையாளர்கள் சட்ட நடவடிக்கை!


கடந்த 06-05-2017 ஆம் திகதி கலைமானி, வியாபாரமானி ஆகிய வெளிவாரிப் பட்டப்படிப்புகளுக்கான மாணவர்களைச் சேர்ப்பதற்கான போட்டிப் பரீட்சை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தினால் (Center for External Degrees and Professional Learning – CEDPL) நடாத்தப்பட்டது. 

ஒரு பல்கலைக்கழகத்தின் பீடத்தில் உள்வாரியாகக் கல்விகற்கும் மாணவர்களின் எண்ணிக்கையின் இருமடங்கு எண்ணிக்கையை வெளிவாரிப்படிப்புக்கு அனுமதிக்கலாம் என்பது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (University Grants Commission – UGC) பணிப்பு. 

இப்பரீட்சைக்கு கலைமானிப் பட்டத்திற்கு விண்ணப்பிருந்த மாணவர்களில் சுமார் 1300 பேரும் வியாபாரமானிப் பட்டத்திற்கு விண்ணப்பத்திருந்த மாணவர்களில் சுமார் 650 பேரும் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர். 

வர்த்தகமானிப்பட்டத்திற்கு விண்ணப்பத்திருந்த மாணவர்களின் எண்ணிக்கை உள்வாரி மாணவர்களின் எண்ணிக்கையைவிடக் குறைவாகக்காணப்பட்டதனால் இவர்கள் பரீட்சைக்கப்படவில்லை (அனைத்து விண்ண்ப்பதாரிகளும் வர்த்தகமானிப்பட்டத்திற்கு அனுமதிக்கப்படவேண்டும்).

பல்கலைக்கழகங்களின் வெளிவாரிப்பட்டப் படிப்பிற்கான நெறிப்படுத்தலானது UGC இன் 932 ஆம் இலக்க சுற்றுநிரூபத்தினால் ஆழுகை செய்யப்படுகின்றது. அண்மைக்காலத்தில் இச்சுற்றுநிரூபமானது மீறப்பட்டு உள்வாரியாக சில நியமனங்கள் செய்யபட்டதைத் தொடர்ந்து இதனால் பாதிக்கப்பட்டவர்கள் UGC இற்குச் செய்திருந்த முறைப்பாட்டின் காரணமாக இச்சுற்றுநிரூபத்தை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று UGC ஆனது அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் மேலுமொரு சுற்றுநிரூபத்தை அனுப்பியிருந்தது.

932 சுற்றுநிரூபத்திற்கமைய வெளிவாரிப்பட்டப்படிப்புடன் சம்பந்தப்பட்ட அனைத்து பரீட்சைகளுக்கும் தேர்வுகளுக்குமான வினாத்தாளைத் தயாரிப்பவர் அதனை நெறிப்படுத்துபவர், விடைத்தாள்களைத் திருத்துணர்குழாம் ஆகியவை உரிய பீடங்களின் பீடசபையினால் (Faculty Board) சிபார்சு செய்யப்பட்டு பல்கலைக்கழகத்தின் மூதவையினால் (Senate) ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். (6.2 Appointment of Examiners of the Commission Circular No. 932. “Board of Examiners should be appointed by the Senate on the recommendation of the EDECU and the relevant Faculty Board for each examination consisting of Chief Examiner and other Examiners for setting questions and other tests, scrutinizing questions and question papers and other tests, moderating and invigilating examinations and other tests and marking examination papers and evaluating other tests as appropriate”). அவ்வாறு செய்யப்படாதவிடத்து அப்பரீட்சையின் வலிதாகும்தன்மை வினவப்பட வேண்டியிருக்கும்.

தென்கிழக்குப் பல்கலைக்கழத்தினால் நடாத்தப்பட்ட இப்போட்டிப்பரீட்சைக்காf இவ்வாறான சிபார்சோ அல்லது மூதவை அனுமதியோ பெறப்படாமல் பஞ்சாயத்தினடிப்படையில் அனுமதி பெறுவதுபோல பரீட்சகர்கள் UGC இன் 932 சுற்றுநிரூபத்திற்கு முரணான முறையில் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஆயிரக்கணக்கான திறமைமிக்க மாணவர்களின் வாழ்க்கை ஒரு சிலரின் சர்வாதிகாரத்தினாலும் தான்தோன்றித் தனத்தினாலும் பாதிக்கப்படப்போவதாகக்கூறி கடந்த இரு கிழமைகளுக்கு முன்னர் முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த மூன்று சிரேஷ்ட விரிவுரையாளர்கள் இப்பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவபீடத்தின் பீடாதிபதியான கலாநிதி எஸ்.குணபாலன் அவர்களுக்கு எழுத்து மூலமான  முறைப்பாடொன்றினைச் செய்திருந்தனர். இம்முறைப்பாட்டின் பிரதிகள் உபவேந்தருக்கும், தென்கிழக்குப் பல்கலைக்கழக மூதவை உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

திறமையான ஆயிரக்கணக்கணக்கான மாணவர்களின் தெரிவு கேள்விக்குறியாகக் காணப்படும் கவலைக்கிடமான வேளையில் இந்நிலமையினை மேலும் பாரதூரமாக்கும் வகையில் CEDPL ஆனது மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான வெட்டுப்புள்ளியியையும் தானே தீர்மானித்து பல்கலைக்கழத்தின் மூதவைக்கு அனுமதிபெற அனுப்பியுள்ளது. அதுவும் Additional Memo ஆகத்தான் போடப்பட்டுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மூதவைக்கு Memo போடுவதற்கு அனுமதிக்கப்படாதவர்களால் போடப்பட்டுள்ளதாகவும் அறியக்கிடைக்கின்றது.

UGC இன் 932 சுற்று நிரூபத்தின் பிரகாரம் CEDPL இற்கோ, அதன் முகாமைக்குழுவிற்கோ (Management Committee) அல்லது கற்கைகள் சபைக்கோ (Board of Studies) பரீட்சைசார்ந்த விடயங்களைப் பல்கலைக்கழகத்தின் மூதவைக்கு நேரடியாக சிபார்சு செய்யும் அதிகாரம் இல்லை. மாறாக, கற்கைநெறிகளுக்குரிய பீடங்களின் பீடசபைகளினூடாகவே இதனைச் செய்யவேண்டும்.

இவ்வெட்டுப்புள்ளியானது இப்போட்டிப்பரீட்சையினை மாத்திரமே அடிப்படையாக வைத்துத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் மூன்று பாடங்களில் A தரத்தைப் பெற்றுப் பல்கலைக்கழக உள்வாரி அனுமதிபெறாத மாணவரொருவர் இந்த சட்டத்திற்கு முரணானதாகக் கருதப்படும் பரீட்சையில் குறைவான புள்ளியைப் பெற்று பட்டப்படிப்பிற்கான அனுமதியினை இழக்கும்வேளையில் அவரைவிடக் குறைவாக, மூன்று பாடங்களிலும் S தரத்தைப் பெற்ற ஆனால் இப்போட்டிப்பரீட்சையில் மாத்திரம் அதிக புள்ளிகளைப்பெற்ற ஒரு மாணவர் இப்பட்டப்படிப்புக்கு அனுமதிபெறக்கூடிய நிலைமையினை இந்த சட்டத்திற்கு முரணான பரீட்சை ஏற்படுத்தியுள்ளது!

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்தினதும் கலை மற்றும் கலாச்சார பீடத்தினதும் ஒவ்வொரு பீடசபைகளிலும் முப்பதுக்கம் மேற்பட்ட உறுப்பினர்கள் காணப்படுகின்றனர். இவர்களது ஆலோசனைகள் அறிவுரைகள் அனுமதிகள் எவையும் பெறப்படாமல் மாணவர்களின் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் இவ்வாறானதொரு சட்டத்திற்கு முரனாண பரீட்சையை நடாத்தி மாணவர்களின் ஏழை மாணவர்களின் வாழ்க்கையைப் பாழடையச் செய்யப்போகும் இவ்வீனச் செயலிற்கு யார் பொறுப்புக்கூறுவர்? இச்சட்டத்திற்கு முரணான பரீட்சைக்கெதிராகவும் சுற்றுநிரூபத்திற்கெதிரான அனுமதி முறைகளுக்குமெதிரான சட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றனவென்பது குறிப்பிடத்தக்கது.


எஸ். எஸ். நவாஸ்
சிரேஷ்ட விரிவுரையாளர்
தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரிப்பட்டப்படிப்புக்கான மாணவர் அனுமதிப் பரீட்சை சட்டத்திற்கு முரணானது! விரிவுரையாளர்கள் சட்ட நடவடிக்கை! தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரிப்பட்டப்படிப்புக்கான மாணவர் அனுமதிப் பரீட்சை சட்டத்திற்கு முரணானது! விரிவுரையாளர்கள் சட்ட நடவடிக்கை! Reviewed by Madawala News on 5/23/2017 12:04:00 PM Rating: 5