tg travels

மருத்துவ சபை தலைமையகம் மீது கைக் குண்டுத் தாக்குதல்


மருதானையிலுள்ள இலங்கை மருத்துவ சபை வளாகத்துக்குள் இருந்து வெடிக்காத கைக்குண்டொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இனந்தெரியாத ஒருவர் நேற்றிரவு 10.30 மணியளவில் இந்த கைக்குண்டை மருத்துவ சபையை நோக்கி வீசியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.

இருப்பினும், அந்த குண்டு வெடித்திருக்கவில்லையென மருத்துவ சபை உறுப்பினர் ஒருவர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மருதானை பொலிஸாரினால் முன்னெடுக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது. 
 

மருத்துவ சபை தலைமையகம் மீது கைக் குண்டுத் தாக்குதல் மருத்துவ சபை தலைமையகம் மீது கைக் குண்டுத் தாக்குதல் Reviewed by Madawala News on 5/13/2017 09:02:00 AM Rating: 5