tg travels

ஞானசார தேரரின் உயிருக்கு அச்சுருத்தல் ! பொலிஸ் முறைப்பாடு ..


ஞானசார தேரருக்கு உயிர் அச்சுறுத்தல் நிலவுவதாக பொதுபல சேனா அமைப்பு பொலிஸ் பொலிஸ் மா அதிபரிடம்  முறைப்பாடு ஒன்றை செய்துள்ளது.

அவ்வமைப்பு அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,

ஞானசார தேரருக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகவும் மத ஸ்தானங்கள் மீது தாக்குதல் நடத்தி நாட்டில் பதட்டத்தை உருவாக்கி ஞானசார தேரரை கொலை செய்ய திட்டம் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஞானசார தேரரை விளக்கமறியலில் வைத்து பாதாள உலக கோஷ்டிகளின் ஆதரவுடன் அவரை கொலைசெய்ய திட்டம் இருப்பதாக தாங்கள் சந்தேகிப்பதாகா பொதுபல குறிப்பிடுள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடு ஒன்றை செய்துள்ளதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
ஞானசார தேரரின் உயிருக்கு அச்சுருத்தல் ! பொலிஸ் முறைப்பாடு .. ஞானசார தேரரின் உயிருக்கு அச்சுருத்தல் ! பொலிஸ் முறைப்பாடு .. Reviewed by Madawala News on 5/24/2017 01:50:00 PM Rating: 5