Yahya

வரதட்சனை வரமா?? சாபமா....??*

தலையங்கம் பலபேருக்கு தலை சுற்றாகவும் தோன்றலாம்,

தலைக்குத்தின் தொடராகவும் இருக்கலாம்...

இன்னும் சிலருக்கு பேசி சலித்து போனதாயும், போயிருக்கலாம்,
வாசித்தவுடனே ஓடிப்போயும் இருக்கலாம்....

மற்றுமொரு கூட்டம் கோபத்தால் கடுப்பேறவும் கூடும், அல்லது மெதுவாக வாசிக்கவும் தொடங்குவர் தயங்கிய இதயங்களாக....

மூலையில் முடங்கிக் கிடக்கும் அப்பாவி இன்னொரு சனம் மௌன அஜ்சலியால் விழுங்கவும் முடியாமல்,துப்பவும் முடியாமல் உள்ளத்து குமுறல்களை அப்படியே உயிருடன் புதைத்தும் இருக்கலாம்....

ஏராயிரம் உள்ளங்களும்  அந்தரங்கப்படுத்திய உணர்வுகள் தான் அதிகம்...

காட்டில் வாழும் புலிக்கு பசிக்கு மானை வேட்டையாடுவது  நம் பார்வையில் கொடூரமாக தோன்றலாம்....

ஆனாலும் என்றோ ஒரு நாள் மான் புலிக்கே இரையாக படைக்கப்பட்டது என்பது இயற்கையின் அங்கீகரிக்கப்பட
வேண்டிய நியதியே....

புலிக்கு புல் ஒருபோதும் இரையாகப் போவதில்லை....

ஒவ்வொருவரது பார்வையும் ஒவ்வொரு விதமானவை..
அவரவரது நியாயங்களும் அவ்வாறே....

*வரதட்சனை* 

என்ற வாசகம் வாயில் உள் நுழைய ஆக்ரோஷமா, எதிர்கட்சியாய் எம் ஆண்வர்க்கத்தினரே எதிர்த்து பேசப்படுவர்...

சீசீசீ....

"முதுகெழும்பில்லாத மடையர்கள்.. "

"ரோசமில்லாத....
சோத்துல உப்பே சேர்க்காதவர்கள்"

"மானம் கெட்ட மானிடப் பிறவி..."

ஆம்ம்...

சிலபோது இதுவும்  நிராகரிக்க முடியாத நிஜங்களும் தான்....

ஆனாலும்...

இந்த மானங்கெட்ட மானிடப் பிறவியினர் தானாய் உருவானவர்கள் அல்ல...

ஆளும் கட்சியின் அருளால்,சுதந்திரமாக சுற்றித்திரிய அனுமதிப்பத்திரம் காலாவதியில்லாம் பெற்றுக் கொடுத்தவர்கள் ஆளும் கட்சியான நாமே...

நானும் நிதானமான சபாநாயகராக வாதாட ஆசைப்படுகிறேன்...
ஆத்திரப்படுவதில் அர்த்தமில்லை என்பதறிந்து...

கூண்டு கிளியாகவும்...
பாசத்தோடு வளர்த்த தம் மகளை கூண்டைக் காட்டி விலை பேசிய வினோதமான பிறவியினர் 
ஆளும் கட்சியான
நாமே....

சொந்த வீட்டையும்,சொகுசான வாழ்க்கைகு வண்டியும்...
சோகமே தெரியாம  சாய்ந்த எழும்ப சோபாவும்...
ஆடம்பர ஆடையும்....
நூறு பவுண் நகையும்...
அடிக்கிற வெயிலுக்கு ஓசியில வார ஏசியும் தருவோம் என விலைப் பேசினால்....
எதிர் கட்சியென்ன, நிதானமான சபாநாயகர் நானும் சற்று நிதானம் இழப்பேனோ என்னவோ....

எதிர் கட்சிக்கு ஆசைக்கு மேல் பேராசையைக் காட்டி உலக நிலையில்லா மோகங்களில்,
நிரந்தரமாக நீராட வாய்ப்பளித்தவர்களும் ஆளும் கட்சியான நாமே....

"மாப்பிள்ளை" தேடலில் எம் ஆளும் கட்சியினரின் அயராத முயற்சியில், வீட்டோடு மேனஜர் மாப்பிள்ளையாம்....
மாப்பிள்ளைட நண்பர் குலாத்துக்கு  மூன்று நாள் இலவச விருந்துபசாரமாம்... அதுவும் மாமியார் தலைமையிலாம்....
மாப்பிள்ளைக்கு பிரேன் நிவ் பி.எம்.டப் லியுவாம்....
அதனோடு  குறுகிய பயணத்திற்கு கூட ஹீரொ ஹொன்டாவாம்....
ஆஆஆ....

*சீரோவான* மாப்பிள்ளையும் இப்ப மொத்த சொத்தோட *ஹீரொ* ஆக்கிய பெருமையும் எம் ஆளும் கட்சியினரான நாமே...வரதட்சனை என்ற வாசகத்தை விளைத்தது மட்டுமல்லாமல்,
கூண்டுக் கிளிய சொத்தோடு சேயார் மார்க்கட்டில் சேயார் செய்தவர்களும் 
ஆளும் கட்சியான நாமே....


நான்கு மாடி வீடும் அறுபது ஏக்கர் நிலமும் என்றால் முந்தி 
அடித்துக் கொண்டு பந்திக்கு முந்துவர் 
அப்போது கூண்டு கிளி  நிறமும் மறையுமாம்...
வயதும் விளம்பரப்படுத்த படாதாம்....
ஊனமான கிளிக்கும் ஓகேவாம்....
ஓசோனே இல்லாட்டியும் பரவாயில்லையாம்....

அடட...

பணமென்றால் பிணமும் வாய் திறக்கும் காலம் அந்தக் காலம்.....

பணமென்றால்   பிணமும் பீசா கேக்கும் காலம் இந்தக் காலம்....

இதில் தன்னம்பிக்கையான எதிர் கட்சியினரை தார் வார்த்தவர்களும் 
ஆளும் கட்சியான நாமே....

****************

நிதானமான சபாநாயகரான நானும் எதிர் கட்சியின்
 சார்பே....
👉🏻வில்லங்கமான வினாக்களை எல்லாம் எதிர் கட்சி சார்பாக தொடுத்த எல்லாம் அறிந்த முட்டாள்கள் ஆளும் கட்சியினரே...
👉🏻 கூண்டு கிளியை,
அவளின பெறுமதியினைக் கூண்டைக் காட்டி கூச்சலிட்ட கருணைக் கொளையாளர்களும்  
ஆளும் கட்சியினரே....
👉🏻உல்லாச வாழ்க்கைக்கு உரத்தோடு , பேராசையையும் உரிமையாக்கியவர்கள் ஆளும் கட்சியினரே....

👉🏻வாழ வந்தவனை  மொத்தத்தில் ....
*வரதட்சனை* என்னும்  பாழடைந்த கிணற்றில் நீரருந்த வழியமைத்தவர்கள்....
ஆளும் கட்சியினரே....

*****************
ஆம்ம்...

வாதாட்டத்தில் தோற்றாலும் வாழ்க்கை என்பது ஒரு முறையே....
தோற்றாலும் மீண்டும்  ஒரு முறை உலக கோப்பையை உரிமையாக்க வாழ்க்கை ஒன்றும்  பண்டமாற்றும்  பொருளல்ல....

'செருப்பு வாரை விட மரணம் எம்மோடு நெருக்கமானது என்பதறிந்தும் இன்னும் நாமும் சலிப்படைய வில்லை வரதட்சனை வாங்குவதற்கும், வரதட்சனை வழங்குவதற்கும் .....

இறையோனின் தண்டனைக்கு பயந்துக் கொள்வோம்.....தீர்ப்பு நாளில் எந்த சாக்கு போக்கும் சொல்லி தப்பித்திட முடியாது......

அவனது தண்டனையில் ஆளும் கட்சியினரும் 'தான்.... எதிர் கட்சியினரும் தான்..... ஏன் சபாநாயகரும் தான் எல்லோரும் சமமே...
 
உலகில் ஏழைப் பெண்ணை ஏமாற்றி, பேராசையில் வரதட்சனைக்கு பின்னே சென்று, உலக சுகபோகங்களை நீயும் அனுபவித்திருக்கலாம்....

இறைவன் முன் நீ மறைத்தவை ஒன்றன் பின் ஒன்றாக எடுத்துக் காட்டப்படும்.....

அப்போது கைசேதப்பட்டு எந்தப் பயனுமில்லை....

சிலபோது அவனது "தண்டனைகளை உன் சகோதரிகள் மூலமோ, உன் மனைவி மக்கள் மூலமோ,உன் குழந்தைகள்  மூலமோ உலகிலே உனக்கு உணர்த்தப்படும்.....

அப்போது உணர்ந்துக் கொள்வாய் *வரதட்சனை* என்னும் கடலில், முட்டாள் மாலுமியாக காகித கப்பலிலே பயணித்தாய் என்பதை.....


Sharmila farwin Binth farook
Nawalapitiya
2017.05.05
8.15 P.M
வரதட்சனை வரமா?? சாபமா....??* வரதட்சனை வரமா?? சாபமா....??* Reviewed by Madawala News on 5/09/2017 12:09:00 AM Rating: 5