tg travels

காலி மாவட்டத்தின் அனைத்து சு க உறுப்பினர்களினதும் உறுப்புரிமைகளை இரத்து செய்யவும் ; வழக்கு பாய்கிறது..




பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்பட்டதை தொடர்ந்து காலி மாவட்டத்தின் சுதந்திர கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களினதும் உறுப்புரிமைகளை ரத்து செய்யுமாறு தான் வழக்கு பதிவு செய்ய உள்ளதாக சட்டத்தரணி ஜயந்த ஜயவீர குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் சட்டங்களின் படி வேட்பு மனுவில் ஒரு வேட்பாளர் தகுதியற்றிருந்தால் அக்கட்சியின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.கொழும்பு மாநாகர சபைக்கான வேட்பு மனு இவ்வாறு நிராகரிக்கப்பட்டது.அதே போல கீதாவின் பாராளுமன்ற உறுப்புரிமை நிராகரிக்கப்பட்டால் அவர் போட்டியிட தகுதியற்றவர் என்றே கருதவேண்டும். அதனால் அந்த மாவட்டத்தின் ஒட்டுமொத்த வேட்பு மனுவுன் நிராகரிக்கப்பட வேண்டும் என தான் நீதிமன்றத்தில் கோரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இலங்கை பாராளுமன்றத்தில் 13 பேர் இரட்டை குடியுரிமை உள்ளவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.அவர்களின் பாராளுமன்ற உறுப்புரிமைகளும்  பாறிக்கப்பட்டால் பல மாவட்டங்களில் பிரதான கட்சிகளின்   ஒட்டுமொத்த வேட்புமனுக்களையும் ரத்து செய்ய வேண்டும் என வழக்குகள் பதிவு செய்யப்படலாம்.

காலி மாவட்டத்தின் அனைத்து சு க உறுப்பினர்களினதும் உறுப்புரிமைகளை இரத்து செய்யவும் ; வழக்கு பாய்கிறது.. காலி மாவட்டத்தின் அனைத்து சு க உறுப்பினர்களினதும் உறுப்புரிமைகளை இரத்து செய்யவும் ; வழக்கு பாய்கிறது.. Reviewed by Madawala News on 5/12/2017 02:49:00 PM Rating: 5