Ad Space avaiable

கட்டாக்காலி தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை அவசியம் ; மத்திய மாகாண சபையில் ஹிதாயத் சத்தார் கோரிக்கை ..


நாட்டில் சுமார் ஏழு இலட்சம் கட்டாக்காலி தெருநாய்கள் காணப்படுகின்றன. இதனைக் கட்டுப்படுத்தா விட்டால் உயிர்ச்சேதம் பாரிய பணவிரயம் என்பவற்றை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என மத்திய மாகாண சபை உறுப்பினர் ஹிதாயத் சத்தார் தெரிவித்தார்.

மத்திய மாகாண சபையின்மாதாந்தக் கூட்டம் அதன் தலைவர் எல்.டி.நிமலசிரி தலைமையில் பல்லேகலை மாகாண சபை மண்டபத்தில் நடைபெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவித்ததாவது-

ஒருவரை தெருநாய் ஒன்று கடித்தால் அவருக்கு ஆறு ஊசிகள் வரை போடப்பட வேண்டும். ஒரு ஊசியின் விலை ஆறாயிரம் ரூபாவாகும். ஒருவருக்கு முப்பத்தாராயிரம் ரூபா வீதம் செலவிடப்பட வேண்டியுள்ளது. 

அதே நேரம் மாதம் இரண்டாயிரம் பேர் விசர்நாய்கடிக்கு ஆளாவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அப்படியாயின் ஒரு மாதத்திற்கு மட்டும் இப்படி 36000 வீதம் 2000 பேருக்கு 72 000 000 (72 கோடி ரூபா) செலவாகிறது. ஆந்த அடிப்படையில் பண விரயம் உயிர்ச்சேதம் என்பவற்றை சந்திக்க வேண்டியுள்ளது.

2006ம் ஆண்டின் பின்பே நாய்களைக் கொள்வதற்கு வகாருன்ய அடிப்படையில் தடை விதிக்கப்பட்டது.அண்மையி ல் கம்பளையில் ஒரு சிறுவனை 40ற்கும் மேற்பட்ட இடங்களில் ஒரு நாய்கடித்துக்குதரிய சம்பவம் இடம் பெற்றுள்ளது. எனவே இது விடயமாக ஆக்கபூர்வநடவடிக்கைகள் தேவை.

மறுச்சுக்கட்டி மக்களின் பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் நோக்க வேண்டும். அவர்கள் எமது மாகாணத்திற்கு உரியவர்களாக இல்லாத போதும் அப்பிரச்சினை தொடாபாக நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. ஏனெனில் சிங்களவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்கள் என்ற ஒருகாரணததிற்காக அவர்கள் 4 மணிநேர இடைவேளையில் வெளியேற்றப்பட்டார்கள்.

20 வருடங்கள் தங்கள் காணி பூமியை அவர்கள் சென்று பார்க்கக் கூட இல்லை. இதன் காரணமாக 20 வருடங்களில் பெரிய காடாக அவர்களது வசிப்பிடங்கள் மதாறின. ஆவர்கள் அரசின் பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசத்தை பிடிக்கவில்லை. தமது சொந்தக் காணிகளையே துப்பரவு செய்தனர். அதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கட்டாக்காலி நாய்களின் தொல்லை போன்றே இன்று உள்ளுராட்சி சபைகளுக்கு குப்பை பிரச்சினையும் பாரியதொரு பிரச்சினையாக உள்ளது. எனவே மாகாண சபை என்ற வகையில் கட்டாக்காலி நாய்களது தொல்லைக்கு நல்லதொரு தீர்வைப் பெற்றுத் தரவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
கட்டாக்காலி தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை அவசியம் ; மத்திய மாகாண சபையில் ஹிதாயத் சத்தார் கோரிக்கை .. கட்டாக்காலி தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை அவசியம் ; மத்திய மாகாண சபையில் ஹிதாயத் சத்தார் கோரிக்கை .. Reviewed by Madawala News on 5/15/2017 03:52:00 PM Rating: 5