tg travels

தோப்பூர் செல்வநகர் பகுதியில் பதற்றநிலை !



பற்றி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை நேரடியாக சந்தித்து அவரின் கவனத்திற்கு கொண்டுவந்தார் இம்ரான் மகரூப் MP.

இன்று மாலை (16.05.2017) திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் செல்வ நகர் பிரதேசத்தில் அமைந்துள்ள பன்சலையில் பௌத்த மதகுரு தலைமையில் ஒன்றுகூடிய வெளி இடங்களில் இருந்து வந்த காடையர்களின் செயற்பாட்டினால் முஸ்லிம்கள் வாழும் செல்வ நகர் பகுதியில்   பதற்ற நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது. 

பன்சல பகுதியில் இருந்து முஸ்லிம் பிரதேசத்தை வெடிச்சத்தமும் கேட்டுள்ளது.

இது திடர்பில் நாம் திருமலை மாவட்ட பா உ இம்றான் எம் பி அவர்களை தொடர்புகொண்டு கேட்டபோது 

இது பற்றி அப்பகுதி மக்கள் தனது கவனத்திற்கு உடனடியாக கொண்டுவந்ததாகவும் நிகழ்வு ஒன்னும் கலந்துகொள்ள திருகோணமலை வந்திருந்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தன அவர்களை நேரடியாக சந்தித்து அவரின் நேரடிக்கவனத்திற்கு கொண்டு சென்றதாகவும் குறிப்பிட்டார்.

அமைச்சர் ருவன் விஜயவர்த்தன அவர்களால் அங்கிருந்து மாவட்டத்தின் பொலிஸ், முப்படைகளின் அதிகாரிகளுக்கு அப்பகுதியில் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டதாகவும் தற்போது நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் இது தொடர்பாக ஆளுநர்,அரசாங்க அதிபர் ஆகியோரின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டதை அடுத்து இது சம்பந்தமான விசேட கூட்டமொன்று நாளை காலை 9.30 க்கு  ஆளுனரின் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது அப்பகுதியில் தொடர்ந்தும் பதற்ற நிலை நிலவுவதாகவும் இதனால் அப்பகுதி பெண்கள் அல் ஹுதா பள்ளிவாயளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும்  ஆண்கள் பொது இடங்களில்  பாதுகாப்புக்கு  உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

இது தொடர்பான மேலதிக விடயங்களை அறிய தான் சாற்றுமுன்னர் களத்துக்கு வந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் குறிப்பிட்டார்.
தோப்பூர் செல்வநகர் பகுதியில் பதற்றநிலை ! தோப்பூர் செல்வநகர் பகுதியில் பதற்றநிலை ! Reviewed by Madawala News on 5/16/2017 10:03:00 PM Rating: 5