tg travels

மரிச்சிக்கட்டி மக்களுக்காக மத்திய மாகாண சபையில் குரல் கொடுத்த ஹிதாயத் சத்தார்..

45 வது நாட்களாக நடைபெற்ற மரிச்சிக்கட்டி மக்களது மண்மீட்பு போராட்டம் நேற்றுடன் தற்காலிகமாக  கைவிடப்பட்ட நிலையில் அம்மக்களுக்கான  நல்ல ஒரு தீர்வை ஜனாதிபதி மற்றும் பிரதமர் பெற்றுக்கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் ஹிதாயத் சத்தார் குறிப்பிட்டார்.

நேற்று மத்திய மாகாண சபை அமர்வில் கல்ம்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் ..

இந்த காணிப் பிரச்சனையை ஒரு அமைச்சரின் தனிப்பட்ட பிரச்சனையாக காட்டுவதற்கு ஒரு அரசியல் கட்சிகளும், இதனை ஒரு அத்துமீறல் எனவும்  அங்கிருக்கும் மக்கள் காடுகளை அழிப்பதாகவும்  இனவாதிகள் சிலர் இதனை சில  மீடியாக்களின் உதவியுடன்  செய்திகளாக வெளியிட்டனர்.

கடந்த மாதம் மத்திய மகாண சபையிலிருந்து கெளரவ ம. மா. ச. உறுப்பினர்களான ஜே. ஜெய்னுலாப்தீன், இப்ராஹிம் ஆகியோருடன் மேல் மாகாண சபை உறுபினர்களான கெளரவ பைரூஸ் ஹாஜியார் மற்றும் இப்திகார் ஜமீல் ஆகியோர் உள்ளிட்ட குழு  நேரடியாக அந்த பகுதிகளுக்கு விஜயம் செய்தோம். 

இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக நடந்த போரின் போது விடுதலைப் புலிகளினால் வட பகுதியில் வாழ்ந்த  முஸ்லீம் மக்களள் விரட்டியடிக்கப்பட்டார்கள்.

அந்தப் போராட்டத்திலே இலங்கை அரசுக்கு எதிராக சேர்ந்து கொள்ளாத ஒரே காரணத்துக்காக  அவர்களிக்கு இந்த நிலை ஏற்பட்டது. 

இலங்கையை ஆண்ட மன்னர்கள் காலத்தில் இருந்து இன்றுவரை இலங்கை முஸ்லீம்கள் என்றும் எப்போதும்  நாட்டின் இறையான்மைக்கு எதிராக போராடவில்லை. பிற சமூகங்களுடன் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்ற ஒரு சமூகம். இப்படியான இரு சமூகத்தை விடுதலை புலிகள் 24 மணி நேரத்துக்குள் தனது சொத்துக்கள் உடமைகளை பறித்துக்கொண்டு ஓரிரு மணி நேரத்திற்குள் புத்தளத்துக்கும் ஏனைய பகுதிகளுக்கும் அகதிகளாக வெளியேரினார்கள். 

கடந்த 2009 ம் ஆண்டு யுத்தம் நிறைவு பெற்றதன் பின்னர் மீண்டும் தங்கள் இருப்பிடங்களுக்கு அவர்கள் செல்ல முற்பட்ட போதும் மிதிவெடிகளை அப்புறப்படுத்தும் வரைக்கும் அவர்களுக்கு அங்கு செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.அதன் பின்னர் அந்த மக்கள் தனது சொந்த நிலப்பிரதேசத்துக்கு சென்று குடியேற ஆரம்பித்துள்ளனர்.

தற்போது 25 வருடங்களின் பின்னர் தங்கள் சொந்த காணிகளில் குடியேற அவற்றை சுத்தம் செய்யும் போது காடுகளை அழிப்பதாக குற்றம் சுமத்துகின்றனர்.உன்மையாகவே அவர்கள் காடுகளை அழிக்கவில்லை மாறாக தனது வீட்டுக்குக்குள்ளும், சூழ உள்ள  பகுதிகளிலும் இருக்கும் இடத்தை வாழ்வதற்கு ஏற்றவாறு சுத்தம் செய்கின்றனர்.கடந்த 25 வருடங்கள் யாரும் இல்லாத இடங்கள்  காடாக மாறாமல் இருந்தால் தான் அது அதிசயம்.

அவர்கள் வீட்டுக்குள்ளும், பாடசாலைகளுக்குள்ளும்,பள்ளிவாசலுகளுக்கு உள்ளும் காடாக வளர்ந்திருக்கும் மரங்களை அப்புறப்படுத்துவது குற்றமாக கருதுவது எப்படி நியாயமாகும்?

மேலும் இந்த நாட்டிலே மற்றைய பகுதிகளில் நாளாந்தம் எவ்வளே மரங்களும், வனப் பிரதேசங்களும் அழிக்கப்படுகின்றன அவற்றுக்கு இல்லாத சட்டம் இந்த மக்களுக்கு மாத்திரம் அமுல்படுத்தப்படுவது ஏன்?

எனவே அந்த மக்களுக்கு நடந்த அநீதியை கருத்தில் கொண்டு அதனை ஒரு பிரதேச மக்களுடைய பிரச்சினையாக பார்க்காமல் ஒரு தேசிய பிரச்சனையாக கருதி அந்த மக்களுக்கு நீதி நியாயம் அனைவரும் குரல்கொடுக்கவேண்டும் என குறிப்பிட்டார்.
ஊடக பிரிவு..
மரிச்சிக்கட்டி மக்களுக்காக மத்திய மாகாண சபையில் குரல் கொடுத்த ஹிதாயத் சத்தார்.. மரிச்சிக்கட்டி மக்களுக்காக  மத்திய மாகாண சபையில் குரல் கொடுத்த ஹிதாயத் சத்தார்.. Reviewed by Madawala News on 5/10/2017 05:36:00 PM Rating: 5