Kidny

Kidny

ஐவேளை தொழுகையிலும் குனூஃத் ஓதி இனவாதிகளுக்கு எதிராக பிரார்த்தியுங்கள்


திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் செல்வ நகர் பிரதேசத்தில் அமைந்துள்ள பன்சலையில் பௌத்த மதகுரு தலைமையில் ஒன்றுகூடிய வெளி இடங்களில் இருந்து வந்த காடையர்களின் செயற்பாட்டினால் முஸ்லிம்கள் வாழும் செல்வ நகர் பகுதியில்   பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.

பதற்றநிலை காரணமாக அங்கிருந்து வெளியேரிய மக்கள் (பெண்கள்,குழந்தைகள்) அச்சம் காரணமாக அயல் பிரதேசங்களில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் அம் மக்கள் அசௌகரிய நிலைக்குள் உட்படுத்தப்பட்டு இனவாதிகளால் தண்டிக்கப்படுவதை, வருமுன் காற்காமல் அரசியல் தலைமைகள் பார்த்துக்கொண்டு இருந்தாலும், முஸ்லிம் சமூகம் பாதிக்கப்பட்ட எமது உறவுகளுக்காக தங்களுடைய ஐவேளை தொழுகையிலும் குனூஃத் ஓதுமாறும் அல்லாஹுவிடம் பிரார்த்தனை செய்யுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

விடுதலைப் புலிகளினால் 2005ம் ஆண்டளவில் ஆயுத முனையில் புனித ரமழான் மாதம் ஒன்றிலேயே மூதூர் முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர் அந்த காலகட்டத்தில் ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இரவோடு இரவாக அந்த இடத்திற்கு வந்து அம் மக்களின் அவல நிலையில் தானும் பங்கேற்று அம்மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதமளித்து வாக்குறுதி வழங்கினார். மட்டுமல்லாமல் புலிகளை விரட்டியடித்ததன் காரணமாக மீண்டும் அம் மக்கள் தங்களுடைய இருப்பிடங்களுக்கு திரும்பச் செய்தார். ஆனால் இன்று அதற்கு மாற்றமாக அரசாங்கமே இனவாதிகளுக்கு பின்னால் இருக்கு  கையில் தடி கொடுத்து முஸ்லிம்கள் மீது அடிக்கச் சொல்கிறது.
இது நல்லாட்சியை நம்பி வாக்களித்த மக்களுக்கு வழங்கும் காட்டுமிராண்டித்தனமான துரோகமாகும்.

புனித ரமழான் மாதம் நெருங்கி வரும் இக்காலகட்டத்தில் இனவாதிகள் முஸ்லிம்களை நோன்பு நோக்க விடாது தராவிஹ் தொழுகைக்கு பெண்கள் செல்லவிடாது தடுப்பதற்காகவே இப்படியான சூட்சுமங்களை செய்து வருகின்றனர். நேற்றைய தினம் உத்தியோகபூர்வமற்ற பாதுகாப்பு படைக்கு ஞானசார தேரர் சிங்கள இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்ததும் இதுபோன்ற கலகங்களை முஸ்லிம்கள் மத்தியில் ஏற்படுத்தி பீதியின் காரணமாக முஸ்லிம்கள் ரமழானுடைய மாதத்தை நிம்மதியாக கழிக்கவிடாமல் செய்யும் சதித் திட்டங்களை நிறைவேற்றுவதற்கான அழைப்பு என்பதை முஸ்லிம் சமூக புரிந்து; 
இச்சந்தர்ப்பத்தில் இனவாதிகள் எதிர்பார்ப்பது போல் முஸ்லிம் இளைஞர்கள்  நடந்து கொள்ளாமல் பொறுமையாகவும்,சகிப்புத்தன்மையுடனும் நடந்து கொள்ளுமாறு தயவாய் கேட்டுக்கொள்கிறேன்.

அல்லாஹுவையும் அவனுடைய தூதரையும் இழிவு படுத்துவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அழிவு நிச்சயம் என்பதை மனதில் கொண்டு ஒவ்வொரு முஸ்லிமும் உங்கள் ஐவேளை தொழுகையில் குனூஃத் ஓதி பிரார்த்திக்குமாறு மீண்டும் ஒருதடவை கேட்டுக்கொள்கிறேன்.

அஹமட் புர்கான்.
கல்முனை.
ஐவேளை தொழுகையிலும் குனூஃத் ஓதி இனவாதிகளுக்கு எதிராக பிரார்த்தியுங்கள் ஐவேளை தொழுகையிலும் குனூஃத் ஓதி இனவாதிகளுக்கு எதிராக பிரார்த்தியுங்கள் Reviewed by Madawala News on 5/17/2017 12:10:00 AM Rating: 5