tg travels

மென்செஸ்டர் தாக்குதலை மேற்கொண்டவர் சல்மான் அபிடீ



இங்கிலாந்திலுள்ள மென்செஸ்டர் அரீனா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 60 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டுப் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

மைதானத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றின் போது இந்த குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.இது ஒரு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் என கூறப்பட்ட நிலையில் ஐ எஸ் அமைப்பு இந்த தாக்குதலை பொறுப்பேற்றுள்ளதாக இங்கிலாந்து ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இங்கிலாந்தில் 22 உயிர்களைப் பலியெடுத்த மென்செஸ்டர் மைதானத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல் நடாத்தியதாக சந்தேகத்தின் பேரில் 23 வயது இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நகரின் கடைத் தொகுதியொன்றில் இருந்த போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.இருப்பினும், குறித்த இளைஞன் நேற்றிரவு சம்பவத்துடன் தொடர்பு பட்டவர் என்பது இதுவரை தெரியவரவில்லையெனவும் அந்நாட்டுப் பொலிஸார் அறிவித்துள்ளனர். 

அதேநேரம் சல்மான் அபிடீ என்ற நபர் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பிரித்தானிய பொலிஸார் அறிவித்துள்ளனர்.

தாக்குதலுக்கு முன்னார் ஐ எஸ் அமைப்பை சேர்ந்த இருவர் இந்த தாக்குதல தொடர்பில் டிவிட்டரில் பதிவு செய்துள்ளதாக இங்கிலாந்து ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து மென்செஸ்டர் விக்டோரியா ரயில் நிலையம் மூடப்பட்டுள்ளதாகவும், அதனூடாகச் செல்லும் சகல ரயில் பயணங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இப்பிரதேசத்திலிருந்து விலகி இருக்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இங்கிலாந்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை இலங்கையை சேர்ந்த எவருக்கும் எதுவித பாதிப்பும் இல்லை என பிரித்தானிய உயர்ஸ்தானிக அதிகாரி ஒருவர் மடவளை நியுஸுக்கு குறிப்பிட்டார்.

மென்செஸ்டர் தாக்குதலை மேற்கொண்டவர் சல்மான் அபிடீ மென்செஸ்டர் தாக்குதலை மேற்கொண்டவர் சல்மான் அபிடீ Reviewed by Madawala News on 5/23/2017 09:36:00 PM Rating: 5