tg travels

மென்செஸ்டர் குண்டுத்தாக்குதல் ! ஐ எஸ் பொறுப்பேற்றது ..


இங்கிலாந்திலுள்ள மென்செஸ்டர் அரீனா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 22 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுப் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

மைதானத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றின் போது இந்த குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.இது ஒரு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் எனவும் கூறப்பட்ட நிலையில் ஐ எஸ் அமைப்பு இந்த தாக்குதலை பொருப்பேற்றுள்ளதாக இங்கிலாந்து ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த தாக்குதலுக்கு முன்னர் ஐ எஸ் அமைப்பை சேர்ந்த இருவர் இந்த தாக்குதல தொடர்பில் டிவிட்டரில் பதிவு செய்துள்ளதாக இங்கிலாந்து ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து மென்செஸ்டர் விக்டோரியா ரயில் நிலையம் மூடப்பட்டுள்ளதாகவும், அதனூடாகச் செல்லும் சகல ரயில் பயணங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இப்பிரதேசத்திலிருந்து விலகி இருக்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இங்கிலாந்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மென்செஸ்டர் குண்டுத்தாக்குதல் ! ஐ எஸ் பொறுப்பேற்றது .. மென்செஸ்டர் குண்டுத்தாக்குதல் ! ஐ எஸ் பொறுப்பேற்றது .. Reviewed by Madawala News on 5/23/2017 06:12:00 PM Rating: 5